search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை மாவட்டத்தில் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்- கோடை காலத்தையொட்டி கலெக்டர் அறிவுரை
    X

    கலெக்டர் கார்த்திகேயன் 

    நெல்லை மாவட்டத்தில் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்- கோடை காலத்தையொட்டி கலெக்டர் அறிவுரை

    • நெல்லை மாவட்டத்தில் குடிநீர் ஆதார மேம்பாட்டு பணிகள் ரூ.529.35 லட்சத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • பொதுமக்கள் வறட்சியை கருத்தில் கொண்டு குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் கோடைகாலத்தில் ஏற்படும் குடிநீர் பற்றாக்குறையை சரிசெய்யும் விதமாக மாவட்ட நிர்வாகத்தால் பல்வேறு திட்டங்களின் மூலம் புதிய ஆழ்துளை கிணறுகள் அமைத்தல், புதிய கிணறு அமைத்தல், ஏற்கனவே உள்ள ஆழ்துளை கிணறு திறன் அதிகரித்தல் உள்ளிட்ட 108 குடிநீர் ஆதார மேம்பாட்டு பணிகள் ரூ.529.35 லட்சத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேவைக்கு ஏற்ப கூடுதல் பணிகளும் மேற்கொள்ளப்படுகிறது.

    எனவே பொதுமக்கள் அனைவரும் கோடை காலங்களில் ஏற்படும் வறட்சியை கருத்தில் கொண்டு குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். குடிநீர் குழாய்களில் சட்டவிரோதமாக மோட்டார் பொருத்தி குடிநீர் உறிஞ்சும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேலும் பொதுமக்கள் குடிநீர் தொடர்பான புகார்களை அம்பை-04634250397, சேரன்மாதேவி- 04634260131, களக்காடு-04635265532, மானூர்-04622485123, நாங்குநேரி-04635250229, பாளையங்கோட்டை- 04622572092, பாப்பாக்குடி- 04634274540, வள்ளியூர்-04637220242, ராதாபுரம்-04637254125 ஆகிய பஞ்சாயத்து யூனியன் அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இந்த தகவலை கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்

    Next Story
    ×