search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிகளில் முகக்கவசம் அணிந்து சென்ற பொதுமக்கள்

    • தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சற்று அதிகரிக்க தொடங்கி உள்ளது.
    • நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டத்தில் மருத்துவமனைகளில் முகக்கவசம் அணய வேண்டும் என்ற உத்தரவானது இன்று முதல் அமலுக்கு வந்தது.

    நெல்லை:

    தமிழகத்தில் கொரோனா வால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சற்று அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    பெரிய அளவிலான பாதிப்பு ஏற்படவில்லை என்றாலும், முன்எச்சரிக்கை நடவடிக்கையாக அரசு ஆஸ்பத்திரிகளுக்கு வரும் வெளி நோயாளிகள், உள் நோயாளிகள், மருத்துவமனை யின் அனைத்து நிலை ஊழியர்களும் இன்று முதல் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும்.

    பொது இடங்களிலும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக முக கவசம் அணிந்து செல்வது நல்லது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தி உள்ளார். இதையடுத்து இந்த நடைமுறை இன்று முதல் தமிழகம் முழுவதும் அமலுக்கு வந்தது.

    நெல்லை

    இதையடுத்து நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த உத்தரவானது இன்று முதல் அமலுக்கு வந்தது. நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் இன்று காலை முதலே நோயாளிகளின் உறவினர்கள் முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். ஆஸ்பத்திரி வளாகத்தில் நடமாடும் அனைத்து தரப்பினரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.

    முகக்கவசம் அணியாமல் சிலர் வந்தபோதிலும், அவர்களுக்கு மருத்து வக்கல்லூரி டீன் ரவிச்சந்திரன் முகக்கவசம் வழங்கினார். தொடர்ந்து அனைவரையும் முகக்கவசம் அணிந்து வர அறிவுறுத்தினார்.

    ஏற்கனவே சமீப காலமாகவே நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி, வட்டார அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களில் டாக்டர்கள், செவிலியர்கள் ஆகியோர் முகக்கவசம் அணிந்தபடியே சிகிச்சை அளித்து வருவதால் எங்களுக்கு இது புதிதாக தோன்றவில்லை என டீன் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.

    தென்காசி, தூத்துக்குடி

    தென்காசி, தூத்துக்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளிலும் இன்று முதல் அனைத்து நோயாளிகள், உறவினர்கள் மற்றும் மருத்துவ குழுவினரும் முகக்கவசம் அணிந்து செல்ல அறிவு றுத்தப்பட்டனர். அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிவதை 100 சதவீதம் உறுதிப்படுத்திட வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி இருக்கிறது.

    ஏனென்றால் நோய் தொற்று என்பது முதலில் ஆஸ்பத்திரிகளிலேயே தொடங்குகிறது. எனவே, ஆஸ்பத்திரிகளில் இத்தகைய சீர்திருத்தத்தை தொடங்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளதன் பேரில் பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்ளும் வகையில் முகக்கவசம் அணியவேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×