என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கிராம நிர்வாக அலுவலர்களை ஈடுபடுத்துவதில் விலக்களிக்க வேண்டும்
- கிராம நிர்வாக அலுவலர்களை ஈடுபடுத்துவதில் விலக்களிக்க வேண்டும்அரங்க. வீரபாண்டியன் வலியுறுத்தல்
- கணினி பயிற்சியையும் புறக்கணிப்பதாக நாங்கள் தெரிவித்தோம்
புதுக்கோட்டை,
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் மாநில செயலாளர் அரங்க. வீரபாண்டியன் வெளியி ட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
டிஜிட்டல் பயிர் சர்வே முறையை அடிப்படையாகக் கொண்டு சாகுபடியை பதிவேற்ற தமிழக அரசு திட்ட மிட்டுள்ளது.
மேற்படி திட்டம் அண்டை மாநிலமான ஆந்திராவில் முதலில் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வேளாண் அதிகாரிகள் மற்றும் நில அளவர்கள் ஆகியோர் மூலம் செய்து வந்தனர்.
பின்னர் தற்போது 2022 -2023-ல் ஒவ்வொரு கிராமங்களிலும் "சச்யவாலா" என்று பல துறைகளை சார்ந்த ஒருங்கிணைந்த குழு மூலம் இத்திட்டம் பயிர் சர்வே எடுக்கப்பட்டு வருகிறது.
அதே நேரம் பேரிடர் காலங்களில் மட்டும் கிராம நிர்வாக அலுவலர்கள் இழப்பீடுகளை கணக்கிட இப்பணியில் நேரடியாக செயல்படுத ்தப்படுகிறார்கள்.
கர்நாடக மாநிலத்தில் ஒவ்வொரு கிராமத்திற்கும் டிஜிட்டல் பயிர் சர்வே பணியை செய்ய 1000 முதல் 1500 உட்பிரிவுகளுக்கு தலா ஒரு நபர் வீதம் என நியமித்து ஒரு உட்பிரிவுக்கு ரூபாய் பத்து என கர்நாடக வேளாண்மை துறை மூலம் வழங்கப்படுகிறது.
எனவே இதுபோன்று தனி நபர்களை நியமித்து நமது மாநிலத்திலும் இப்ப பணியை செய்ய வேண்டும்.
இதற்காக கடந்த 8-ந் தேதி தமிழ்நாடு அரசின் வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் வருவாய் செயலாளர் ஆகியோர்களை தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் நிர்வாகிகள் சுரேஷ், ராஜேந்திரன், முத்துச்செல்வன், நல்ல கவுண்டன், விஸ்வநாதன் உள்ளிட்டவருடன் சென்று இடர்பாடுகளை கூறியுள்ளோம்.
இது தொடர்பான கணினி பயிற்சியையும் புறக்கணிப்பதாக நாங்கள் தெரிவித்தோம் . இவ்வாறு அவர் கூறியுள்ளார்.