search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆலங்குடி அருகே 17 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு அகற்றம்-அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
    X

    ஆலங்குடி அருகே 17 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு அகற்றம்-அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

    • ஆலங்குடி அருகே 17 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது
    • சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை புதுக்கோட்டை மாவட்ட கலெக்டருக்கும், அதன் தொடர்புடைய வருவாய் துறை ஆலங்குடி தாசில்தாருக்கும் உரிய பரிசீலனை செய்து இடத்தை ஆக்கிரமிப்பில் இருந்து அகற்றும்படி உத்தரவிட்டதாக கூறப்படுகிறது

    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கே.வி கோட்டை ஊராட்சி உருமநாதபுரம் கிராமம் பஸ் ஸ்டாப் அருகில் 6.76 ஹெக்டேர் அதாவது 17 ஏக்கர் வருவாய்த்துறை கணக்கில் கோவில் இடமாக உள்ளது. இப்பகுதியை சேர்ந்த தவளைப்பள்ளம், பாத்திமா நகர், உருமநாதபுரம், அரசடிப்பட்டி மற்றும் எம்.ஜி.ஆர் நகர் ஆகிய கிராமத்தில் உள்ள நபர்கள் பல ஆண்டுகளாக விவசாயம் செய்து அனுபவித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இது தொடர்பாக மழவராயன்பட்டி கிராமத்தை சேர்ந்த மழவராயர் சமூக அறக்கட்டளை சார்பில் அதன் தலைவர் தெட்சிணாமூர்த்தி மகன் மீனாட்சி சுந்தரம் என்பவர் மதுரை உயர் நீதிமன்றத்தில் இந்த இடம் தனி நபர்களால் ஆக்கிரமிப்பில் இருப்பதாக கூறி 2021 ல் மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த மனுவை பரிசிலினை செய்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை புதுக்கோட்டை மாவட்ட கலெக்டருக்கும், அதன் தொடர்புடைய வருவாய் துறை ஆலங்குடி தாசில்தாருக்கும் உரிய பரிசீலனை செய்து இடத்தை ஆக்கிரமிப்பில் இருந்து அகற்றும்படி உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அரசு கணக்கில் கோவில் இடம் என்றும் அறக்கட்டளை சார்பில் பெரிய கோட்டை முனீஸ்வரர் மற்றும் பன்னீர் கோட்டை பரிவார தெய்வங்களுக்கான இடம் என உயர்நீதிமன்றத்தில் வழக்காடியதாக கூறப்படுகிறது.

    ஆலங்குடி தாசில்தார் செந்தில் நாயகி தலைமையில் வருவாய் துறையினர் ஈடுபட்டு 17 ஏக்கர் நிலத்தையும் ஆக்கிரமிப்பில் இருந்து அகற்றினர். இந்நிலையில் ஒரு கிணற்றில் இருந்து பொதுமக்கள் தினந்தோறும் குடிநீர் எடுத்துச் செல்லப்படுவதாக கூறினர். அதனால் அந்த கிணறு அகற்றப்படவில்லை. வருவாய்த்துறை சார்பில் ஆலங்குடி வட்ட துணை தாசில்தார் பழனியப்பன், வருவாய் ஆய்வாளர் துரைக்கண்ணன், சர்வேயர் கோபி கே.வி.கோட்டை கிராம நிர்வாக அலுவலர் காமாட்சி, உதவியாளர்கள், வருவாய்த்துறையினர் மற்றும் ஆலங்குடி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் நதியா தலைமையிலான 10-க்கு மேற்பட்ட போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


    Next Story
    ×