search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புத்தகத்திருவிழாவிற்கு ஸ்டெச்சரில் அழைத்து வரப்பட்ட பெண் மாற்று திறனாளி
    X

    புத்தகத்திருவிழாவிற்கு ஸ்டெச்சரில் அழைத்து வரப்பட்ட பெண் மாற்று திறனாளி

    • மாற்று திறனாளி பெண்ணின் விருப்பத்திற்கு இணங்க புத்தகத்திருவிழாவிற்கு ஸ்டெச்சரில் அழைத்து வரப்பட்டார்
    • ஏராளமானவர்கள் புத்தகப்பரிசு கொடுத்து உற்சாகப்படுத்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே கொத்தம்பட்டியை சேர்ந்த பன்னீர்செல்வம்-வாசுகி தம்பதியினருக்கு சுகுணா (33), சுகந்தி (30) ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். இருவரும் மாற்றுத்திறனாளிகள். சுகந்திக்கு திருமணமாகிவிட்டது. முடக்குவாத தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் சுகுணா பெற்றோரின் பராமரிப்பில் இருந்து வருகிறார்.எட்டாம் வகுப்புவரை படித்துள்ள சுகுணா சிறுவயது முதல் புத்தக வாசிப்பில் மிகுந்த ஆர்வமுடையவராக உள்ளார். தொடர்ந்து சமூக வலைதளங்களில் கவிதைகளை எழுதி வருகிறார். கவிதைக்காக இதுவரை 270 சான்றிதழ்களும், 2 விருதுகளும் பெற்றுள்ளதாகக் கூறுகிறார்.இந்நிலையில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் சுகுணா புதுக்கோட்டையில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவிற்கு வரவேண்டும் என்ற ஆசையை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து தனியார் ஆம்புலன்ஸ் உதவியுடன் சுகுணாவை புதுக்கோட்டை புத்தகத்திருவிழாவிற்கு ஒருங்கிணைப்பாளர்கள் அழைத்து வந்தனர். அவருக்கு ஏராளமான புத்தகங்களை பலரும் பரிசளித்தனர்.பின்னர் இது குறித்து பேசிய சுகுணா, 10 ஆண்டுகளாக வீட்டிலேயே முடங்கிக் கிடந்த என்னை புத்தகத் திருவிழாவில் பங்கேற்க வைத்த அனைவருக்கும் நன்றி. இது என்னை மிகவும் மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. எனக்குப் பிடித்த ஏராளமான புத்தகங்களை பலரும் வாங்கிக்கொடுத்தது எனக்கு மேலும் ஊக்கத்ததை அளித்துள்ளது. தொடர்ந்து வாசிப்பதும், எழுதுவதும் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. மிகவும் வறுமையில் வாடும் எனது நிலையைக் கருத்தில்கொண்டு ஏதாவது ஒரு வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தால் பேருதவியாக இருக்கும் என்றார்.சுகுணாவின் தாயார் வாசுகி கூறுகையில், எனது மூத்த மகள் சுகுணாவை இந்த புத்தகத் திருவிழாவில் பங்கேற்க வைத்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. கூலி வேலையும் சிறிதளவு விவசாயம் செய்து வரும் தங்களுக்கு தமிழ்நாடு அரசு உதவிகளை செய்ய முன்வர வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்.

    Next Story
    ×