என் மலர்
உள்ளூர் செய்திகள்

தனிநபர் கழிவறை பயன்பாடு குறித்த விழிப்புணர்வு பேரணி
- தனிநபர் கழிவறை பயன்பாடு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
- விராலிமலை தூய்மை பாரத இயக்கம் சார்பில்
புதுக்கோட்டை:
விராலிமலையில் தூய்மை பாரத இயக்கம் சார்பில் தனிநபர் கழிவறை பயன்பாடு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பேரணியை ஒன்றிய குழு தலைவர் காமு மணி தொடங்கி வைத்தார்.வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுவாமிநாதன், கலைச்செல்வி, மேலாளர் கண்ணன் முன்னிலை வகித்தனர். இதில் பள்ளி மாணவர்கள், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
விராலிமலை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தொடங்கிய பேரணி கடைவீதி, பேருந்து நிலையம், சோதனை சாவடி வழியாக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நிறைவடைந்தது.
பேரணியில் திறந்த வெளியில் மலம் கழிக்காதீர், கழிப்பறையை பயன்படுத்துவோம், சிந்தித்து செயல்படுவோம், நாளைய பாரதம் நம் கையில் தூய்மையான பாரதம் உருவாக தூய்மைக்கு துணை நிற்போம், வாய்மைக்கு குரல் கொடுப்போம், கண்ட இடங்களில் எச்சில் துப்புவது நம்மீது நாமே எச்சில் துப்புவதற்கு சமம் போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி நகரின் முக்கிய வீதிகள் வழியாக முழக்கமிட்டு சென்றனர்.
இதில் விராலிமலை ஊராட்சி மன்ற தலைவர் ரவி, துணைத் தலைவர் தீபன் சக்கரவ ர்த்தி, ஒன்றிய கவுன்சிலர் மணிகண்டன் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.
இதே போல் விராலிமலை சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட 88 பஞ்சாயத்துக்களில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.






