search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுக்கோட்டை திருவரங்குளம் பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் மெர்சி ரம்யா நேரில் ஆய்வு
    X

    புதுக்கோட்டை திருவரங்குளம் பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் மெர்சி ரம்யா நேரில் ஆய்வு

    • புதுக்கோட்டை திருவரங்குளம் பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் மெர்சி ரம்யா நேரில் ஆய்வு மேற்கொண்டார்
    • பொது கிணற்றை பயன்பாட்டிற்கு கொண்டு வர உத்தரவு

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை, மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதன்படி திருவரங்குளம் ஒன்றியம், குப்பக்குடி ஊராட்சியில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் போடப்பட்ட பேவர்பிளாக் சாலை, சிமெண்ட் சாலை ஆகியவற்றை ஆய்வு செயதார்.குப்பக்குடி கிராம அங்காடியினையும், பொட்டத்திக்கொல்லை கிராமத்தில் நடப்பட்டுள்ள வேப்பம், நாவல், புங்கை உள்ளிட்ட மரங்களின் பராமரிப்பையும் அவர் ஆய்வு செய்தார். .

    பின்னர் கே.வி.கோட்டையில் ரூ.3.65 லட்சம் மதிப்பீட்டில் போடப்பட்ட சிமெண்ட் சாலையை அவர் ஆய்வு மேற்கொண்டு, அங்கிருந்த பொதுமக்களிடம் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது அங்குள்ள பொதுகிணற்றை சரிசெய்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.அதனை தொடர்ந்து ஆலங்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டதோடு, கல்லுகுண்டு ஊரணி குளம் ரூ .58 லட்சம் மதிப்பில் தூர்வாரப்பட்டு மேம்பாடு செய்யப்பட்டுள்ளதையும், திருவரங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செயல்பாடுகளையும் அவர் ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின் போது, மாவட்ட ஊரக வளர் ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதப்பிரியா, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் எஸ்.பாலகிருஷ்ணன், திருவரங்குளம் ஒன்றியக்குழுத் தலைவர் வள்ளியம்மை தங்கமணி, இணை இயக்குநர் (ஊரக நலப் பணிகள்) மரு.ராமு, வட்டார வளர்ச்சி அலுவலர் கோகுலகிருஷ்ணன், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

    Next Story
    ×