என் மலர்
உள்ளூர் செய்திகள்

புதுக்கோட்டையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு
- புதுக்கோட்டை, அறந்தாங்கி பகுதிகளில்மேலும் 5 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு
- டெங்கு அறிகுறி இருப்பவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தல்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது டெங்கு காய்ச்சல் சற்று அதிகரித்து வருகிறது. கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் டெங்கு காய்ச்சலால் மாவட்டம் முழுவதும் 35 பேர் பாதிக்கப்பட்டனர். நேற்று புதுக்கோட்டை வடக்கு 3-ம் வீதியில் ஒருவருக்கும், அறந்தாங்கி பகுதியில் மேற்பனைக்காடு குளமங்கலம் வடக்கு தெரு,எழில் நகர், பூவை உள்ளிட்ட நகர பகுதிகளில் மேலும் 4 பேருக்கும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து ஊராட்சி ஒன்றியங்கள் தோறும் 20 டெங்கு களப்பணியாளர்களும், டவுன் பஞ்சாயத்து பகுதிகளில் 10 களப்பணியாளர்களும், நகராட்சி பகுதிகளில் 30 களப்பணியாளர்களும் டெங்கு ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் காய்ச்சலை தடுக்க சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
டெங்கு அறிகுறி இருப்பவர்கள் அருகிலுள்ள சுகாதார நிலையம் அல்லது மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ளுமாறு மாவட்ட சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.






