என் மலர்
உள்ளூர் செய்திகள்

தொகுதி மக்களை என் உயிரை கொடுத்து காப்பாற்றுவேன் -முன்னாள் அமைச்சர் பேச்சு
- விராலிமலை தொகுதி மக்களுக்கு என் உயிரை கொடுத்து காப்பாற்றுவேன் என்று முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் ெதரிவித்தார்.
- கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை
புதுக்கோட்டை:
தமிழகம் முழுவதும் மின் கட்டணம், பால் விலை, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்தும், உயர்த்தப்பட்ட கட்டணங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கினங்க நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தெற்கு மற்றும் மேற்கு ஒன்றிய கழகம் சார்பில் விராலிமலை செக்போஸ்ட் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள், பொதுமக்கள், கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
அப்போது டாக்டர் சி.விஜயபாஸ்கர் பேசியதாவது:-
மக்கள் நினைத்தால் ஆட்சியில் யாராக இருந்தாலும் தூக்கி வீசப்படுவார்கள். இரண்டு ஆண்டுகள் தி.மு.க. ஆட்சி முடிந்துவிட்டது. இன்னும் மக்கள் இரண்டு ஆண்டுகள் மட்டும் பல்லை கடித்துக்கொண்டு ஓட்டி விட்டால் மீண்டும் அ.தி.மு.க. தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும். மீண்டும் எடப்பாடியார் தலைமையில் அ.தி.மு.க. ஆட்சிக்கு வரும்.
அப்போது நிறுத்தப்பட்ட அம்மா மருந்தகம், தாலிக்கு தங்கம், அம்மா மினி கிளினிக் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வாய்ந்த திட்டங்கள் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும். விராலிமலை தொகுதி யாரும் கண்டிராத அளவுக்கு வளர்ச்சி பெற்று உள்ளது. கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரையும் விராலிமலை தொகுதி மக்களுக்கு என் உயிரை கொடுத்து மக்களை காப்பாற்றுவேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் பழனியாண்டி, நாகராஜ், மாவட்ட கவுன்சிலர் சிவசாமி, கூட்டுறவு சங்க தலைவர் அய்யப்பன், ஒன்றிய கவுன்சிலர்கள் மணிகண்டன் கல்குடி அய்யப்பன், சுப்பிரமணி, விராலிமலை ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தீபன் சக்ரவர்த்தி உள்ளிட்ட ஏராளமான அ.தி.மு.க.வினர், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.






