என் மலர்
உள்ளூர் செய்திகள்

மின் சிக்கனம் விழிப்புணர்வு பேரணி
- மின் சிக்கனம் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
- பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது
புதுக்கோட்டை:
தமிழ் நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் மின்சார சிக்கனத்தை வலியுறுத்தி முக்கிய வீதிகளில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை புதுக்கோட்டை செயற்பொறியாளர் அசோக்குமார் தொடங்கி வைத்தார். பேரணியில் மின்சாரம் சேமிப்பு, தேவையில்லாத இடத்தில் மின்சாரத்தை தவிர்த்து இயற்கையை பாதுகாப்பது, சூரிய ஒளியை பயன்படுத்துவது, மின்விரயம் தவிர்ப்பது, திறன்மிகு மின் உபகரணங்களை பயன்படுத்துவது குறித்து பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பேரணியில் கந்தர்வகோட்டை உதவி செயற் பொறியாளர்கள் வில்சன், வெங்கடேசன், மோகனசுந்தரம், சரவணகுமார் மற்றும் மின்சாரத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
Next Story






