search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுக்ேகாட்டை நகராட்சி பள்ளியில் கலெக்டர் கவிதா ராமு திடீர் ஆய்வு
    X

    புதுக்ேகாட்டை நகராட்சி பள்ளியில் கலெக்டர் கவிதா ராமு திடீர் ஆய்வு

    • இத்திட்டத்தில் அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் பயிற்சி கையேடுகள், அனைத்து மாணவர்களுக்கும் மாணவர் பயிற்சி கையேடுகள் மற்றும் எண்ணும் எழுத்தும் கற்றல் கற்பித்தல் உபகரண்கள் வழங்கப்பட்டுள்ளது.
    • 1ம் வகுப்பு அரும்பு கற்றல் நிலையிலும், 2ஆம் வகுப்பு அரும்பு, மொட்டு கற்றல் நிலையிலும், 3ஆம் வகுப்பு அரும்பு, மொட்டு, மலர் கற்றல் நிலையிலும் மாணவ, மாணவியர்களின் கற்றல் நிலையினை கண்டறிவதற்காக செயல் திட்டங்கள், வளறறி மற்றும் தொகுத்தறி மதிப்பீடுகள் பள்ளி அளவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை ராஜகோபாலபுரம் நகராட்சித் தொடக்கப் பள்ளியில், எண்ணும் எழுத்தும் திட்ட பணிகள் மூலம் மாணவ, மாணவியர்களுக்கு கற்பிக்கப்படும் முறைகள் குறித்து, மாவட்ட கலெக்டர் கவிதா ராமு ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது:

    எண்ணும் எழுத்தும் திட்டத்தில் 1, 2, 3 ஆம் வகுப்புகளுக்கு கற்பிக்கும் புதுக்கோட்டை மாவட்டத்தில் 3 மாவட்ட ஆசிரியர் பயிற்சி பள்ளி விரிவுரையாளர்கள், 3 வட்டார வளமைய பயிற்று–நர்கள், 6 இடைநிலை ஆசிரியர்களுக்கு மாநில அளவிலான முதன்மை கருத்தாளர்கள் பயிற்சியும், 298 இடைநிலை ஆசிரிய–ர்களுக்கு மாவட்ட அளவி–லான கருத்தாளர்கள் பயிற்சியும், 1,965 இடைநிலை ஆசிரியர்களுக்கு வட்டார அளவிலான ஆசிரியர்களுக்கான பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் இத்திட்டத்தில் அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் பயிற்சி கையேடுகள், அனைத்து மாணவர்களுக்கும் மாணவர் பயிற்சி கையேடுகள் மற்றும் எண்ணும் எழுத்தும் கற்றல் கற்பித்தல் உபகரண்கள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஆசிரியர் கையேடு, மாணவர்களுக்கான அரும்பு, மொட்டு, மலர் குறித்த தமிழ், ஆங்கிலம் மற்றும் கணக்கு குறித்த 1,55,410 புத்தகங்கள் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    1ஆம் வகுப்பு அரும்பு கற்றல் நிலையிலும், 2ஆம் வகுப்பு அரும்பு, மொட்டு கற்றல் நிலையிலும், 3ஆம் வகுப்பு அரும்பு, மொட்டு, மலர் கற்றல் நிலையிலும் மாணவ, மாணவியர்களின் கற்றல் நிலையினை கண்டறிவதற்காக செயல் திட்டங்கள், வளறறி மற்றும் தொகுத்தறி மதிப்பீடுகள் பள்ளி அளவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இதன்மூலம் மாணவ, மாணவியர்களின் கற்றல் கற்பித்தல் திறன்கள் ஆரம்ப நிலையிலேயே சிறப்பான நிலையில் அமைந்து, அவர்களின் எதிர்கால கனவுகள் மெய்படும் வகையில் செயல்திட்டங்கள் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படவுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×