என் மலர்
உள்ளூர் செய்திகள்

துப்புரவு தொழிலாளர்கள் போராட்டம்
- துப்புரவு தொழிலாளர்கள் போராட்டம் நடைபெற்றது
- உரிய காலத்தில் ஊதியம் வழங்காததை கண்டித்து
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகராட்சியில் நிரந்தரம் மற்றும் ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்கள் 167க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இதில் நிரந்தர தொழிலாளர்களுக்கு பணிமூப்பு அடிப்டையில் ஊதியமும், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றிற்கு ரூ 385 வீதம் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.
மாதத்தின் முதல் வாரத்தில் ஊதியம் வழங்கப்பட்டு வந்த நிலையில், இன்று 17 தேதி ஆகியும் கடந்த மாதத்திற்கான ஊதியம் வழங்கப்படவில்லையென கூறப்படுகிறது. எனவே வருகின்ற தீபாவளி பண்டிகையை கருத்தில் கொண்டு, கடந்த மாதத்திற்கான ஊதியத்தை உடனடியாக வழங்க வலியுறுத்தி 167 ஒப்பந்த தொழிலாளர்கள் இன்று காலை 6 மணி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுபட்டனர்.
மேலும் 120க்கும் மேற்பட்ட துப்புரவு தொழிலாளர்கள் நகராட்சி அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர். போராட்டத்தினை தொடந்து சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு எட்டப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.
போராட்டத்தில் சிஐடியூ ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் கர்ணா, சிஐடியு உள்ளாட்சி செயலாளர் மாணிக்கம்,சிபிஎம் நகரச் செயலாளர் கணேசன் உள்ளிட்ட ஏராளமான துப்புரவு தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.






