என் மலர்
உள்ளூர் செய்திகள்

வன்னியன் விடுதியில் ஜல்லிகட்டு-வருவாய் கோட்டாச்சியர் ஆய்வு
- வன்னியன் விடுதியில் ஜல்லிகட்டு நடைபெறும் இடத்தில் வருவாய் கோட்டாச்சியர் ஆய்வு செய்தார்
- 63 ஆண்டுகளாக தற்காலிக வாடிவாசல் அமைக்கப்பட்டு நடை பெற்று வந்த ஜல்லிக்கட்டு இந்தாண்டு புதிய வாடிவாசலில் நடைபெற உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வன்னியன்விடுதி கிராமத்தில் மாயன் பெருமாள் கோவில் 63-ம் ஆண்டு ஜல்லிக் கட்டு விழா வரும் 17-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக அமைச்சர் சி.வி.மெய்யநாதன் தலைமையில் கடந்த செப்டம்பர் 3-ம் தேதி புதிய வாடி வாசல் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
அப்போது இந்தாண்டு புதிய வாடிவாசலில் இருந்து மாடுகள் அவிழ்ந்து விடப்பட்டு ஜல்லிகட்டு நடைபெற வேண்டும். எனவே வாடிவாசல் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க அரசு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அதன்படி வாடிவாசல் கட்டுமான பணி நிறைவடைந்தது. இதனால் 63 ஆண்டுகளாக தற்காலிக வாடிவாசல் அமைக்கப்பட்டு நடை பெற்று வந்த ஜல்லிக்கட்டு இந்தாண்டு புதிய வாடிவாசலில் நடைபெற உள்ளது.
இந்தாண்டு ஜல்லிகட்டிற்கான ஏற்பாடுகளை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், ஆலங்குடி வட்டாட்சியர் செந்தில் நாயகி உள்ளிட்ட வருவாய்த்துறையினர் வாடிவாசல் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தை ஆய்வு செய்தனர்.






