என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![அனாதையாக கிடந்த பணத்தை, நேர்மையாக ஒப்படைத்த மூதாட்டி அனாதையாக கிடந்த பணத்தை, நேர்மையாக ஒப்படைத்த மூதாட்டி](https://media.maalaimalar.com/h-upload/2023/03/18/1851443-img20230317082605.webp)
அனாதையாக கிடந்த பணத்தை, நேர்மையாக ஒப்படைத்த மூதாட்டி
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- சாலையில் கிடந்த 45 ஆயிரம் ரூபாயை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்
- காவல்துறையினர், பொது மக்கள் பாராட்டு
அறந்தாங்கி,
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆயிங்குடி பகுதியைச் சேர்ந்தவர் அமுதாராணி (55).விவசாயக் கூலி வேலை பார்க்கும் இவர் தனது பேரக்குழந்தைக்கு மருத்துவ பரிசோதனை செய்வதற்காக, ஆயிங்குடி யிலிருந்து அறந்தாங்கி பேருந்தில் சென்றுள்ளார்.கட்டுமாவடி முக்கம் பேருந்து நிறுத்தத்தில் பேருந்தில் இருந்து இறங்கி சாலையில் நடந்துள்ளார். அப்போது கட்டு கட்டாக பணம் கிடப்பதை அவர் கண்டுள்ளார். யாரும் இல்லாத நிலையில், சாலையில் கிடந்த பணத்தை எடுத்து, அருகே இருந்த பெட்டிக்கடை ஒன்றில் கொடுத்துள்ளார். பணத்தை தவற விட்டவர்கள் வந்து கேட்டால் ஒப்படைத்து விடுமாறு கூறிச் சென்றுள்ளார்.மீண்டும் மருத்துவமனை யிலிருந்து திரும்பி வந்த அவர் பெட்டிக்கடைக்கு சென்று யாரேனும் வந்தார்களா என கேட்டு உள்ளார். அதற்கு யாரும் வரவில்லையென பெட்டிக்கடைகாரர் கூறிய தையடுத்து, அவரிடமி ருந்து 45 ரொக்கப் பணத்தை வாங்கிய அமுதாராணி அறந்தாங்கி காவல்நிலையத்தில் சென்று ஒப்படைத்துள்ளார்.ஏற்கனவே அறந்தாங்கி எல்என்புரம் பகுதியைச் சேர்ந்த குமார் (45) என்பவர் கடைவீதிக்கு செல்லு ம்போது தான் வைத்திருந்த ரொக்கப்பணம் ரூ.45 காணவில்லையென புகார் கொடுத்துள்ளார்.அவரை வரவழைத்த காவல்துறையினர், பணம் தொலைந்த நேரத்தையும், கண்டெடுக்கப்பட்ட நேரத்தையும் ஒப்பிட்டு பார்த்து விசாரணைக்கு பிறகு 45 ஆயிரம் ரொக்கப் பணத்தை உரியவரிடம் ஒப்படைத்தனர். கூலி வேலை பார்த்து பிழைப்பு நடத்தும் பெண்மணியாக இருந்தாலும் அடுத்தவ ர்களின் பணத்திற்கு ஆசை படாத பெண்மணியை காவல்துறையினரும், பொதுமக்களும் வெகுவாக பாராட்டினர்.