என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
அடையாளம் தெரியாத வாகனங்கள் மோதியதில் வாலிபர் உள்பட 2 பேர் பலி
- விராலிமலை அருகே அடையாளம் தெரியாத வாகனங்கள் மோதியதில் வாலிபர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
- சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
புதுக்கோட்டை:
விராலிமலை அருகே உள்ள மணமேடுபட்டியை சேர்ந்தவர் கருப்பையா மகன் அய்யப்பன் (வயது 20). இவர் சம்பவத்தன்று இரவு தனது நண்பரான பொருவாய் கிராமத்தை சேர்ந்த சந்தானம் மகன் மகாமுனியுடன் விராலிமலை அருகிலுள்ள மாதிரிபட்டி திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த அய்யப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
மேலும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய மகாமுனியை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த விராலிமலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அய்யப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்திற்கு காரணமான வாகனம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதே போல் விராலிமலையிலிருந்து புதுக்கோட்டை செல்லும் சாலையில் உள்ள மேம்பாலம் அருகே திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி 50 வயது மதிக்கத்தக்க வடமாநிலத்தை சேர்ந்த ஒருவர் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த விராலிமலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த நபர் யார்?, அவர் எந்த ஊரைச்சேர்ந்தவர் என்பது குறித்தும், விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.