என் மலர்
உள்ளூர் செய்திகள்

ரத்ன அங்கி அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவியுடன் காட்சியளித்த பிரசன்ன வெங்கடேச பெருமாளை திரளான பக்தர்கள் வழிபட்டனர்.
புரட்டாசி முதல் சனிக்கிழமை; பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
- பெருமாளுக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
- பக்தர்கள் தேங்காய் உடைத்து துளசி மாலை உள்ளிட்ட பொருட்களை வழங்கி வழிபட்டனர்.
தஞ்சாவூர் :
புரட்டாசி மாதம் பெருமாளு க்கு உகந்ததாகும்.
இந்த மாதத்தில் பெருமாள் பக்தர்கள் அசைவ உணவை தவிர்த்து சைவ உணவு மட்டும் சாப்பிட்டு விரதம் இருப்பது வழக்கம்.
பொதுவாக சனிக்கிழமைகளில் பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடை பெறும்.
இருப்பினும் புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகள் பிரசித்தி பெற்றவை.
இதனால் புரட்டாசி மாத சனிக்கி ழமைகளில் பெருமாள் கோயில்களில் சிறப்பு பூஜை நடைபெறும். அதன்படி இன்றுபுரட்டாசி மாத முதல் சனிக்கிழமை என்பதால் தஞ்சை நாலுகால் மண்டபம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் அதிகாலையில் நடை திறக்கப்பட்டது.
பெருமாளுக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
அதைத்தொ டர்ந்து சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடந்தது.
பெருமாள் ரத்ன அங்கி அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவியுடன் காட்சியளித்தார்.
அதிகாலை யில் இருந்தே பக்தர்கள் கோவிலுக்கு குவிய தொடங்கினர்.
நேரம் செல்ல செல்ல பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது.
நீண்ட வரிசையில் நின்று மனம் உருகி பெருமாளை தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் தேங்காய் உடைத்து துளசி மாலை உள்ளிட்ட பொருட்களை வழங்கி வழிபட்டனர்.
இதே போல் தஞ்சை மானம்புச்சாவடி பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில், நீலமேக பெருமாள், நரசிம்ம பெருமாள், மேல ராஜா வீதி நவநீதகிருஷ்ணன், கீழ ராஜவீதி வரதராஜ பெருமாள், தெற்கு வீதி கலியுக வெங்கடேச பெருமாள், பள்ளி அக்ரஹாரம் கோதண்ட ராம பெருமாள், படித்துறை வெங்கடேச பெருமாள் உள்ளிட்ட நகரில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் புரட்டாசி முதல் சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.






