search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    மாமல்லபுரம் புராதன சின்னங்கள் பகுதியில் கதிர்வீச்சா? - அணு விஞ்ஞானிகள், பேரிடர் மீட்பு குழுவினர் ஆய்வு
    X

    கடற்கரை கோயில் வளாகத்தில் கதிர்வீச்சு கண்டு பிடிக்கும் கருவியுடன் அணு விஞ்ஞானிகள், பேரிடர் மீட்பு படையினர்

    மாமல்லபுரம் புராதன சின்னங்கள் பகுதியில் கதிர்வீச்சா? - அணு விஞ்ஞானிகள், பேரிடர் மீட்பு குழுவினர் ஆய்வு

    • சென்னையில் ஜி 20 மாநாடு நடைபெற உள்ளது.
    • இதில் பங்கேற்கும் வெளிநாட்டு பிரதிநிதிகள் மாமல்லபுரம் வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    ஜி 20 மாநாட்டில் பங்கேற்க சென்னை வரும் வெளிநாட்டு பிரதிநிதிகள் பிப்ரவரி 1-ம் தேதி மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களைச் சுற்றிப் பார்க்க உள்ளனர். அப்பகுதியின் அருகில் கல்பாக்கம் அணுமின் நிலையம் இருப்பதால் அதில் இருந்து கதிர்வீச்சு ஏதும் உள்ளதா? இருந்தால் அதன் அளவு என்ன? கட்டுப்படுத்துவது எப்படி? என்பது குறித்து இன்று தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் கல்பாக்கம் அணு விஞ்ஞானிகள் ஆய்வுகள் மேற்கொண்டனர்.

    அவர்கள் கொண்டு வந்திருந்த கதிர்வீச்சு கண்டறியும் விசேஷ கருவியை வைத்து கடற்கரை கோயில், அர்ச்சுனன்தபசு, ஐந்து ரதம் பகுதியில் சோதனை இட்டனர். அதில் கதிர்வீச்சு அளவு 0.0 என காண்பிக்கப்பட்டதாக கல்பாக்கம் அணு விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×