என் மலர்
உள்ளூர் செய்திகள்

பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் ராஜா எம்.எல்.ஏ. ஆலோசனை நடத்திய காட்சி.
சங்கரன்கோவிலில் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் ராஜா எம்.எல்.ஏ. ஆலோசனை
- சங்கரன்கோவில் தொகுதியில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
- புதிய கட்டிடங்கள் கட்டும் பணிகளை விரைவாக தொடங்க வேண்டும்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் தொகுதியில் தி.மு.க. அரசு அமைந்த உடன் பல எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதில் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் ரூ.9 கோடி மதிப்பீட்டில் பன்னோக்கு மருத்துவ கட்டிடங்கள், புதிய அரசு விருந்தினர் மாளிகை, சங்கரன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மினி ஸ்டேடியம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டப்பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தி.மு.க. தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது.
இதில் பொதுப்பணித்துறை கோட்ட பொறியாளர் ராஜசேகரன், உதவி கோட்ட பொறியாளர் உலகம்மாள், செயற்பொறியாளர் அழகர்சாமி, உதவி செயற்பொறியாளர் ஜான் ஆசீர், உதவி பொறியாளர்கள் சுரேந்தர், பாக்கியநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.
புதிய கட்டிடங்கள் கட்டும் பணிகளை விரைவாக தொடங்க வேண்டும்.இது தொடர்பாக எந்த உதவிகள் தேவைப்பட்டாலும் தன்னை தொடர்பு கொள்ளலாம் எனவும், அதை அமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும் இந்த மாதம் பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு சங்கரன்கோவில் மற்றும் தென்காசியில் ஆய்வுப்பணி களுக்காக வர இருப்பதால் அது குறித்த முன்னேற்பாடு பணிகள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது.






