search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடந்த ஆண்டில் 112 போக்சோ வழக்குகள் பதிவு
    X

    கடந்த ஆண்டில் 112 போக்சோ வழக்குகள் பதிவு

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் 112 போக்சோ வழக்குகள் பதிவு போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.
    • பொதுமக்கள் 83000 31100 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை கூறியதாவது:-

    ராமநாதபுரம் மாவ ட்டத்தில் கடந்த 2021-ம் வருடம் 51 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட் டுள்ளது. 2022-ம் ஆண்டு 33 கொலை வழக்குகள் பதிவானது. இது கடந்த ஆண்டை விட 35 சதவீதம் குறைவானதாகும். சொத்து வழக்குகளை பொறுத்த மட்டில் கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு சொத்து வழக்குகளின் கண்டுபிடிப்பு 55 சதவீதத்தில் இருந்து 60 சதவீதமாக அதிகரித்துள்ளது.

    கொடுங்குற்ற வழக்கு களில் 2021-ம் ஆண்டு 69 வழக்குகளும், 2022-ம் ஆண்டு 56 வழக்குகளும் பதிவாகி உள்ளது. இது கடந்த ஆண்டை விட 13 வழக்குகள் குறைவானதாகும். கொலை, கொலை முயற்சி, வன்முறை மற்றும் காயம் சம்பந்தப்பட்ட வழக்குகளில் 2021-ம் ஆண்டு 907 வழக்குகளும், 2022-ம் ஆண்டு 840 வழக்குகளும் பதிவாகி உள்ளது. இது கடந்த ஆண்டை விட 7 சதவீதம் குறைவாகும். 2022-ம் ஆண்டு 112 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    பாலியல் குற்றங்கள் தொடர்பாக, பள்ளி மற்றும் கல்லூரிகளில் தொடர்ந்து விழிப்புணர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த வருடம் ஏற்பட்ட 1,199 வாகன விபத்துக்களில் 360 பேர் உயிரிழந்துள்ளனர். 1286 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டை விட 10 சதவீதம் வாகன விபத்துகள் அதிகரித்துள்ளது. விதி மீறிலில் ஈடுபட்ட 3 லட்சத்து 96 ஆயிரத்து 782 இரண்டு மற்றும் 4 சக்கர வாகனங்கள் மீது மோட்டார் வாகன சட்டத்தின்கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தொடர்பாக தீவிர சோதனை மேற்கொண்டதில், புகையிலை பொருட்களை மொத்தமாகவும், சில்லரை யாகவும் விற்பனை செய்த 602 பேர் மீது 575 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சுமார் ரூ.34 லட்சத்து 8 ஆயிரத்து 856 மதிப்புள்ள 3ஆயிரத்து 698 கிலோ குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 4,451 பேர் மீது 4,402 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 11284 லிட்டர் மதுபானம் மற்றும் பனங்கள் 3,442 லிட்டர் கைப்பற்றப்பட்டது.

    கஞ்சா விற்ற 192 பேர் மீது 94 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சுமார் ரூ.29 லட்சத்து 27 ஆயிரத்து 80 மதிப்புள்ள 266 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், 105 பேரின் வங்கி கணக்குகள் மற்றும் ஒரு நபரின் சொத்துக்கள் முடக்கப்பட்டன.

    சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்ட 85 பேர் மீது 121 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 143 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நடப்பாண்டில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை சம்பந்தமாக 22 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் தொடர்புடைய 25 பேர் கைது செய்யப்பட்டனர்.

    சூதாட்ட குற்ற சம்பவங்கள் தொடர்பாக இந்த ஆண்டில் மொத்தம் 51 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 275 பேர் கைது செய்யப்பட்டனர்.இந்தவருடம் 1.1.2022-ம் தேதி முதல் இந்நாள் வரை சட்டம்-ஒழுங்கு பிரச்சினையில் ஈடுபட்ட 7 பேர், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 6 பேர், பாலினகுற்ற செயல்களில் ஈடுபட்ட 6 பேர், சொத்து குற்றசெயல்களில் ஈடுபட்ட 3 பேர், தேசவிரோத குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட 2 பேர் என மொத்தம் 24 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இந்த ஆண்டு சைபர் கிரைம் காவல்நிலையத்தில் நடப்பாண்டில் 711 புகார் மனுக்கள் நேரடியாகவும், இணைய தளம் வழியாகவும் பெறப்பட்டு விசாரணைக்குபின் 74 சைபர் குற்றவழக்குகள் பதிவு செய்யப்பட்டு 11 எதிரிகள் கைது செய்யப்பட்டனர்.

    மேலும் இந்த வழக்குகளில் சம்பந்தப்பட்ட எதிரிகளின் வங்கி கணக்குகளில் இருந்த ரூ.68லட்சத்து 38 ஆயிரத்து 980 முடக்கம் செய்யப்பட்டது மட்டுமின்றி இந்த வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.13 லட்சத்து84 ஆயிரத்து 25 திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது.செல்போன்கள் காணாமல் போனதாக பெறப்பட்ட 853 புகார்களில் 552 செல்போன்கள் கைப்பற்றப்பட்டு புகார்தாரர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.

    கஞ்சா, குட்கா மற்றும் புகையிலை பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்பவர்கள் மற்றும் பதுக்கிவைப்பவர்கள், சில்லறை மதுபானம் விற்பனை செய்பவர்கள் பற்றிய தகவல் தெரிந்தால், பொதுமக்கள் 83000 31100 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×