என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கச்சத்தீவு திருவிழாவுக்கு 72 படகுகளில் 2,400 பேர் பயணம்
- ராமேசுவரத்தில் இருந்து கச்சத்தீவு திருவிழாவுக்கு 72 படகுகளில் 2,400 பேர் பயணம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- இங்கு வருடந்தோறும் இந்திய-இலங்கை நாட்டு மீனவர்கள் கலந்து கொள்ளும் சிறப்பு திருப்பலி விழா நடைபெறும்.
ராமநாதபுரம்
ராமேசுவரம் அருகே இந்திய கடல் எல்லையை ஒட்டியுள்ள கச்சத்தீவில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இங்கு வருடந்தோறும் இந்திய-இலங்கை நாட்டு மீனவர்கள் கலந்து கொள்ளும் சிறப்பு திருப்பலி விழா நடைபெறும்.
இந்த ஆண்டுக்கான விழா மார்ச் 3 மற்றும் 4-ந்தேதிகளில் நடைபெறுகிறது. இதில் ராமேசுவரத்தில் இருந்து மீனவர்கள், பொதுமக்கள் கலந்து கொள்ள உள்ளனர். விழா குறித்து முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை, கடற்படை கமாண்டர் முகமதுஷானவாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமை தாங்கி பேசியதாவது:-
வருகிற மார்ச் மாதம் நடைபெற உள்ள கச்சத்தீவு திருவிழாவுக்கு ராமேசு வரத்தில் இருந்து பெண்கள், குழந்தைகள் என மொத்தம் 2,400பேர் 60 விசைப்ப டகுகள், 12 நாட்டுப்படகுகளில் சென்று வருவதற்கான முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டு வருகிறது. தேர்வு செய்யப்பட்ட பொதுமக்கள் காவல்துறை, கடற்படை அலுவலர்களின் பரிசோதனைக்கு உட்பட்டு அனுப்பப்படுவார்கள். இப்பயணத்தில் கலந்து கொள்ளும் பொதுமக்களும் அரசு வழிகாட்டுதலை கடைபிடித்து பாதுகாப்பாக சென்று வர வேண்டும்.
இவ்விழாவிற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் மாவட்ட காவல் துறை, கடற்படை மற்றும் மீன்வளத்துறை உரிய பணிகளை திட்டமிட்டு செயல்பட்டு பாதுகாப்புடன் அழைத்துச் சென்று வர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் மீன்வளத்துறை துணை இயக்குநர் காத்தவராயன், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அருண், துணை காவல் கண்காணிப் பாளர் உமாதேவி, ராமநாதபுரம் வருவாய் கோட்டா ட்சியர் கோபு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சேக் மன்சூர், காவல் ஆய்வாளர் ரமேஷ் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்