search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பூக்களின் விலை 3 மடங்கு அதிகரிப்பு
    X

    ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பூக்கள்.

    பூக்களின் விலை 3 மடங்கு அதிகரிப்பு

    • ராமநாதபுரத்தில் பூக்களின் விலை 3 மடங்கு அதிகரித்துள்ளது.
    • அதிக முதலீடு செய்தும் எதிர்பார்த்த அளவிற்கு விற்பனை இல்லை, என்றார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் பூக்கள் சாகுபடி ஒரு சில பகுதிகளில் மட்டுமே நடக்கிறது. மதுரை, புதுக்கோட்டை சந்தைகளில் இருந்து மொத்த வியாபாரிகள் பூக்களை வாங்கி வந்து சந்தையில் விற்கின்றனர்.

    இதன் காரணமாக பூக்களின் விலை சற்று அதிகமாகவே உள்ளது. விநாயகர் சதுர்த்தி விழா, தொடர்ந்து முகூர்த்த நாட்கள் எதிரொலியாக பூக்களின் விலை வழக்கமான விலையை விட 3 மடங்கு அதிகரித்துள்ளது. பூக்கள் விலை அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் விநாயகா் சதுா்த்திக்கான பூக்கள் வாங்கத் தயக்கம் காட்டினா்.

    மேலும் வழக்கமான அளவை விட குறைவாக பூக்களை மக்கள் வாங்கிச் சென்றனர். இதனால் பூ விற்பனை குறைந்தது.

    ராமநாதபுரம் மாவட்ட தமிழ்நாடு பூக்கட்டும் வியாபாரிகள் சங்கத்தலைவர் முருகன் கூறுகையில், 2 நாட்களுக்கு முன்பு மல்லிகை ரூ.400-க்கு விற்றது ரூ.1600-க்கும், 300-க்குவிற்ற ரோஜா ரூ.800, ரூ.400-க்கு விற்ற முல்லை ரூ.1700, செவ்வந்தி ரூ.150ல் இருந்து ரூ.750 என விலை அதிகரித்துஉள்ளது. ரூ.10-க்கு விற்ற கதம்பம் மூழம் ரூ.20-க்கு விற்கின்றனர். அதிக முதலீடு செய்தும் எதிர்பார்த்த அளவிற்கு விற்பனை இல்லை, என்றார்.

    Next Story
    ×