என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ராமநாதபுரம் நகை மோசடியில் மேலும் 4 பேருக்கு வலைவீச்சு
- ராமநாதபுரம் நகை மோசடியில் மேலும் 4 பேருக்கு வலைவீசி தேடி வருகின்றனர்.
- இந்த மோசடி வழக்கில் தொடர்புடைய பாலமுருகன், முத்துபகவதி, சண்முகவள்ளி, கோபிநாத் ஆகிய 4 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் அருகே உள்ள காருகுடி பகுதியை சேர்ந்த இளங்கண்ணன் என்பவரின் மகள் மீராலெட்சுமி (வயது26). இவரிடம் அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பவரின் மனைவி வளர்மதி (30), அவரது தங்கை காயத்ரி ஆகியோர் ஏலத்திற்கு வரும் நகைகளை குறைந்த விலைக்கு வாங்கி தருவதாக கூறி ரூ.10.50 லட்சம் வாங்கி உள்ளனர்.
ஆனால் அவர்கள் கூறியது போல் நகை வங்கி தரவில்லை. மேலும் மீராலெட்சுமியிடம் வாங்கிய பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை. இதனால் நகை வாங்கி தருவதாக பணமோசடி செய்ததாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் மீராலெட்சுமி கடந்த மாதம் புகார் செய்தார்.
அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் மீராலெட்சுமியிடம் மட்டுமின்றி ராமநாதபுரம் மாவட்டம் காருகுடி, சக்கரக்கோட்டை, மண்டபம், உச்சிப்புளி, பரமக்குடி, கமுதி, ஆர்.எஸ்.மங்களம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 31 பெண்களிடம் குறைந்த விலைக்கு நகை தருவதாக கூறி வளர்மதி மற்றும் அவரது தங்கை ரூ2.50 கோடி பண மோசடி செய்தது தெரிய வந்தது.
அவர்களது மோசடியில் மேலும் 5 பேருக்கும் தொடர்பு இருந்துள்ளது. இதையடுத்து வளர்மதி, காயத்ரி, ராமநாதபுரம் நகை கடை உரிமையாளர் ராஜேஷ், பாலமுருகன், முத்துபகவதி, சண்முக வள்ளி, கோபிநாத் ஆகிய 7 பேர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.
அவர்களில் வளர்மதி மற்றும் காயத்ரி ஆகிய இருவரும் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு பரமக்குடி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை தொடர்ந்து நகை கடை உரிமையாளரான ராமநாதபுரம் வெளிப்பட்டிணம் தெற்கு ரத வீதியை சேர்ந்த ராஜேசை நேற்று கைது செய்தனர்.
இவரது நகைக்கடையில் அடகு வைத்த நகைகளை குறிப்பிட்ட காலத்திற்குள் திருப்பாதவர்களின் நகைகளை குறைந்த விலைக்கு வாங்கி தருவதாக கூறி தான் வளர்மதி மற்றும் அவரது தங்கை காய்த்ரி ஆகியோர் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த மோசடி வழக்கில் தொடர்புடைய பாலமுருகன், முத்துபகவதி, சண்முகவள்ளி, கோபிநாத் ஆகிய 4 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்