search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கலை திருவிழாவில் 900 மாணவ-மாணவிகள் பங்கேற்பு
    X

    திருப்புல்லாணி ஒன்றிய சேர்மன் புல்லாணி ரிப்பன் வெட்டி கலைத்திருவிழாவை தொடங்கி வைத்தார்.

    கலை திருவிழாவில் 900 மாணவ-மாணவிகள் பங்கேற்பு

    • திருப்புல்லாணியில் நடந்த கலை திருவிழாவில் 900 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.
    • ஓவியப்போட்டி, நடனம், நாடகம், மொழி திறன் போட்டி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.

    கீழக்கரை

    தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் வட்டார அளவிலான கலைத் திருவிழா திருப்புல்லாணி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

    இதில் 20 பள்ளிகளைச் சேர்ந்த 900 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். தொடக்க விழாவில் ராமநாதபுரம் முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து தலைமை வகித்தார்.

    திருப்புல்லாணி ஒன்றிய சேர்மன் புல்லாணி போட்டியை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். வட்டார வளமையம் மேற்பார்வையாளர் சேதுபதி வரவேற்றார்.

    திருப்புல்லாணி ஊராட்சி மன்ற தலைவி கஜேந்திரமாலா ஒன்றிய கவுன்சிலர் கலா ராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 3 நாட்கள் நடைபெற்ற கலைத்திருவிழாவில் மாணவ மாணவிகளின் ஓவியப்போட்டி, நடனம், நாடகம், மொழி திறன் போட்டி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.

    வெற்றி பெற்றவர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது இதில் வெற்றி பெறும் மாணவ மாணவிகள் மாவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர்.

    விழாவில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ், உதவி திட்ட அலுவலர் கர்ணன், வட்டார கல்வி அலுவலர்கள் உஷாராணி, ஜெயா, திருப்புல்லாணி தலைமை ஆசிரியர் (பொ) பிரேமா, இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர்கள் முருகவேல், செந்தில் குமார் மற்றும் ஆசி ரியர் பயிற்றுநர்கள், பள்ளி ஆசிரியர்கள் ஏராள மானோர் விழாவில் கலந்து கொண்டனர். இதற்கான சிறப்பான ஏற்பாடுகளை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகர் செய்தார்.

    Next Story
    ×