என் மலர்
உள்ளூர் செய்திகள்
ராமேசுவரத்தில் 98 மி. மீ. மழை
- ராமேசுவரத்தில் 98 மி. மீ. மழை பதிவாகி உள்ளது.
- கல் உப்பு உற்பத்தி செய்யும் பணி முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம்
தமிழக கடலோர பகுதிகளில் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
ராமநாதபுரம் மாவட்ட த்தில் நேற்று காலை வெயில் சுட்டெரித்த நிலையில் திடீரென்று பிற்பகலில் கருமேகங்கள் சூழ்ந்து பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.
இதன் காரணமாக ராமநாதபுரத்தில் தாழ்வான பகுதிகளில் மழை வெ ள்ளம் சூழ்ந்தது. தெருக்களில் மழைநீர் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். நடப்பாண்டில் வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்யும் என்ற எதிர்பார்ப்பில் விவசாய பணிகளை நம்பிக்கையுடன் தொடங்கி உள்ளனர்.
இந்த மழையால் மாவட்டத்தில் நிலவி வந்த வெப்பத்தின் தாக்கம் குறைந்து குளிர்ச்சி நிலவியது. உப்பள பாத்திகள் மழை நீரில் மூழ்கின. கல் உப்பு உற்பத்தி செய்யும் பணி முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று காலை 6 மணி வரை பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
ராமநாதபுரம்-35.40, மண்டபம்-12, ராமேசுவரம்-98.20, பாம்பன்-59.40, தங்கச்சிமடம்-50.30, பள்ளமோர்க்குளம்-7, திருவாடானை -15.20, தொண்டி-0.20, முதுகுளத்தூர்-20, கடலாடி-65,வாலி நோக்கம் -42.40.