search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாபெரும் இலவச மருத்துவ முகாம்
    X

    மாபெரும் இலவச மருத்துவ முகாம்

    • திருப்புல்லாணியில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் நாளை நடக்கிறது.
    • தாதனேந்தல் ஊராட்சி மன்றத்தலைவர் டாக்டர் ஆர்.கோகிலா ராஜேந்திரன் வரவேற்றார்.

    கீழக்கரை

    ராமநாதபுரம்-திருப்புல்லாணி ஈ.சி.ஆர் பள்ளப்பச்சேரி ரோட்டில் பி.வி.எம் மனநலக்காப்பகம் திறப்பு விழாவை முன்னிட்டு பி.வி.எம். அறக்கட்டளை மருத்துவ சேவை அணி, மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து மாபெரும் இலவச மருத்துவ முகாம் திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளியில் நாளை 5-ந் தேதி நடக்கிறது.

    ராமநாதபுரம் ஆரோக்யா மருத்துவமனை ஆகியோர் இணைந்து நடத்தும் சர்க்கரை நோயாளி களுக்கான இலவச கண் விழித்திரை பரிசோதனை முகாம் மற்றும் பொது மருத்துவ முகாம் நாளை நடைபெறுகிறது.

    பி.வி.எம் அறக்கட்டளை போர்டு சேர்மன் சித்தார் கோட்டை முகம்மதியா பள்ளிகளின் இணைத் தலைவர், இளம் வள்ளல் புருணை தொழிலதிபர் ஹாஜி எஸ்.டி.ஷாஜஹான் வழிகாட்டுதலின் படி,

    பி.வி.எம் அறக்கட்டளை நிர்வாகிகள் ஆலோசனை படி நடைபெறும் இந்த முகாமிற்கு பி.வி.எம் மருத்துவ சேவை அணியின் மாநில தலைவர் சமூக சேவகர் யாசர் அரபாத் தலைமை வகிக்கிறார்.

    திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் தாதனேந்தல் ஊராட்சி மன்றத் தலைவர் டாக்டர் ஆர்.கோகிலா ராஜேந்திரன் வரவேற்புரை நிகழ்த்த உள்ளார்.திருப்புல்லாணி ஒன்றிய கவுன்சிலர் சிவசுப்பிரமணியன், திருப்புல்லாணி ஊராட்சி மன்றத் தலைவர் கஜேந்திரமாலா, ஐ.மு.மு.க மாநில செயலாளர் அன்வர் அலி, தொண்டரணி மாநில பொருளாளர் அகமது இப்ராகிம் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

    நேஷனல் பிரஸ் அண்ட் மீடியா பெடரேஷன் தேசிய தலைவரும், புலனாய்வு எக்ஸ்பிரஸ் இதழ் எடிட்டரும், பி.வி.எம் அறக்கட்டளை சேர்மனும், பி.வி.எம். மனநல காப்பகம் நிறுவனருமான தேசிய விருதாளர் டாக்டர் அப்துல் ரசாக் முகாம் அறிமுக உரை நிகழ்த்த உள்ளார். ராமநாத புரம் தொகுதி எம்.பி நவாஸ்கனி, திருப்புல்லாணி ஒன்றிய சேர்மன் புல்லாணி ஆகியோர் சிறப்பு அழைப்பா ளர்களாக கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைக்க உள்ளனர்.

    பி.வி.எம் மருத்துவ சேவை அணியின் மாவட்ட தலைவர் அபுல்ஹசன், மாவட்ட செயலாளர் ஷாநாஸ் கான், மாவட்ட துணைத்தலைவர் குமார், மாவட்ட பொருளாளர் எம்.யாசர் அரபாத், மாவட்ட துணைச்செயலாளர்கள் ஹபீப் ரஹ்மான், முஹம்மது கனி, ஜாபர், ராமநாதபுரம் நகர் தலைவர் முஹம்மது யூனுஸ் கான், நகர் துணை செயலாளர் சிவராஜா, நகர் செயலாளர் மன்சூர், நகர் பொருளாளர் சபரிநாதன், தி.மு.க தலைமை கழக சொற்பொழிவாளர் முஜிபுர் ரஹ்மான் உள்பட பலர் பங்கேற்க உள்ளனர்.

    மருத்துவ முகாமிற்கான ஏற்பாடுகளை பி.வி.எம் அறக்கட்டளை மருத்துவ சேவை அணி ராமநாதபுரம் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர், கிளை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×