என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தொண்டியில் கழிவுநீராக மாறிவரும் குளம்
- தொண்டியில் குளத்திற்குள் கழிவுநீர் விடப்படுவதால் சாக்கடையாக மாறிவருகிறது.
- சுற்றுலாப்பயணிகளும், வாகன ஓட்டிகளும் மூக்கைப்பிடித்துக்கொண்டு இந்த பகுதியைக் கடக்கும் நிலை உள்ளது.
தொண்டி
ராமநாதபுரம் மாவட்டம். தொண்டியில் கிழக்கு கடற்கரை சாலையும், தொண்டி-மதுரை சாலையும் சந்திக்கும் இடத்தில் வண்ணாங்குளம் உள்ளது. இந்த குளத்தை பொதுமக்கள் குளிப்பதற்கு பயன்படுத்துகின்றனர்.
சில மாதங்களில் பெய்த மழையால் இந்த குளம் நீர் நிறைந்து காணப்பட்டது. அதில் கரையே தெரியாத அளவிற்கு ஆகாய தாமரை படர்ந்து குளிக்க பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
மேலும் குளத்திற்குள் கழிவுநீர் விடப்படுவதால் குளம் கழிவுநீர் சாக்கடையாக மாறிவருகிறது. அந்த பகுதியை கடந்தால் துர்நாற்றம் வீசுகிறது. பொதுமக்களும், இந்த வழியாக பயணிக்கும் சுற்றுலாப்பயணிகளும், வாகன ஓட்டிகளும் மூக்கைப்பிடித்துக்கொண்டு இந்த பகுதியைக் கடக்கும் நிலை உள்ளது.
ஆகாய தாமரையால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட குளத்தை சுத்தப்படுத்தி, ஆழப்படுத்தி முன்பு போல் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.
அதற்கு முன்னதாக குளத்தை சுகாதாரத்துறையினர் பார்வையிட்டு நோய் தொற்று ஏற்படாமலிருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.