search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நீர்வடி மேம்பாட்டு திட்டத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டும்
    X

    தீர்த்தாண்டதானம் கிராமத்தில் ஊரணி தூர்வாரும் பணியை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    நீர்வடி மேம்பாட்டு திட்டத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டும்

    • ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் நீர்வடி மேம்பாட்டு திட்டத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.
    • விவசாயிகள் மாவட்ட நீர்வடி மேம்பாட்டு திட்டத்தை பயன்படுத்த வேண்டும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை ஊராட்சி ஒன்றியத்தில் வேளாண்மைத்துறையின் மூலம் மாவட்ட நீர்வடி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஊரணிகள் சீரமைத்தல், பண்ணை குட்டைகள் அமைத்தல் விவசாயிகளுக்கு முழு மானியத்துடன் நுண்ணுயிர் பாசன திட்டத்தில் உபகரணங்கள் வழங்கி வருவதை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    விவசாயிகளுக்கு விளை நிலங்களில் பண்ணை குட்டை அமைத்து பயன்பெறும் திட்டம் செயல்பட்டு வருகிறது. விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் ஒரு பகுதியில் பண்ணை குட்டை அமைக்கும் பொழுது மழைக்காலங்களில் பெறக்கூடிய தண்ணீர் சேமிப்பதன் மூலம் வறட்சி காலங்களில் விவசாயி களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

    அதுமட்டுமின்றி பண்ணை குட்டைகள் அமைப்பது விவசாயி களுக்கு இணை தொழிலாக மீன் வளர்க்க, கறவை மாடுகளுக்கு தீவனப்புல் வளர்க்க பயனுள்ளதாக இருக்கும். எனவே விவசாயிகள் மாவட்ட நீர்வடி மேம்பாட்டு திட்டத்தை பயன்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் வேளாண்மைத்துறை இணை இயக்குநர் சரஸ்வதி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) தனுஷ்கோடி, திருவாடனை ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் முகமது முக்தார், பாசிப்பட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் உம்மூர் சலீமா நூர் அமீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×