என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவி ஏற்பு
- கீழக்கரை ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவி ஏற்றனர்.
- கீழக்கரை நகர் மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா, துணைத்தலைவர் ஹமீது சுல்தான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கீழக்கரை
கீழக்கரை ரோட்டரி சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா தலைவர் ஹசனுதின் தலைமையில் நடந்தது. சிறப்பு விருந்தினராக ரோட்டரி மாவட்டம் 3212 முன்னாள் ஆளுநர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா, துணை ஆளுநர் பாபு, பட்டயத்தலைவர் அலாவுதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தலைவராக சுல்தான் சம்சூல் கபீர், செயலாளராக சுப்ரமணியன் உள்ளிட்ட நிர்வாகிகள் பொறுப்பேற்றுக் கொண்டனர். பட்டயத்தலைவர் அலாவுதீன் வரவேற்றார். பேராசிரியர் முகம்மது ஆசிப், கல்லூரி மாணவி ஆய்சத் ருக்சானா உள்ளிட்ட பலர் பேசினர்.
நலத்திட்ட உதவிகளாக ரொக்கபரிசு பி.வி.எம். அறக்கட்டளைக்கும், மாணவி மர்யமின் பெற்றோருக்கும் வழங்கப்பட்டது. 10-வது மற்றும் பிளஸ்-2 தேர்வில் சாதனை புரிந்த மாணவ, மாணவிகளுக்கும், ஆசிரியர் மற்றும் பள்ளிகளுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. சாதனை படைத்த இளம் தலைமுறை மாணவ மாணவிகள் 7 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டது. முன்னதாக மரக்கன்றுகள் நடப்பட்டன. கீழக்கரை நகர் மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா, துணைத்தலைவர் ஹமீது சுல்தான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.