search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விழிப்புணர்வு மாரத்தான் போட்டி
    X

    விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

    • விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடந்தது.
    • போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் நண்பர்கள் அறக்கட்டளை சார்பில் வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம், பெண்களின் பாதுகாப்பு, போதைப்பொருள் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு மாரத்தான் நடந்தது. இதில் 15 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் 8 கிலோ மீட்டர் தூரமும், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு 3 கிலோ மீட்டர் தூரமும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. 8 கிலோ மீட்டர் தூர மாரத்தான் போட்டிக்கு தொண்டி செய்யது முகமது அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இருந்து பழையக் கோட்டை வரையும், 3 கிலோ மீட்டர் போட்டிக்கு காடாங்குடி வரையும், தொண்டி-மதுரை சாலையில் ஏராளமானோர் கலந்து கொண்டு ஓடினர்.

    தொண்டி பேரூராட்சி தலைவர் ஷாஜஹான் பானு ஜவகர் அலிகான், வட்டார மருத்துவ அலுவலர் வைதேகி, சப்-இன்ஸ்பெக்டர் விஷ்ணு, மேற்கு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி முருகானந்தம், நகர காங்கிரஸ் தலைவரும், கவுன்சிலருமான காத்தராஜா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். சிறுவர்களுக்கு 2 கிலோமீட்டர் தூர மாரத்தான் ஓட்டம் நடந்தது. முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசுத்தொகை, கோப்பை, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    Next Story
    ×