search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மிளகாய் வணிக வளாகம் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
    X

    எட்டிவயல் கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்ட 65 வணிக கடைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காெணாலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதையொட்டி கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் குத்துவிளக்கேற்றினார்.

    மிளகாய் வணிக வளாகம் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

    • ராமநாதபுரத்தில் மிளகாய் வணிக வளாகம் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • கூடுதல் வணிக வளாக கடைகள் மற்றும் குளிர்சாதன கிட்டங்கிகள் விரிவாக்கம் செய்யப்படும்.

    ராமநாதபுரம்

    வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் ராமநாதபுரம் மாவட்டம், எட்டிவயல் கிராமத்தில் ஒருங்கிணைந்த மிளகாய் வணிக வளாகம் அமைக்கப்பட்டுள்ளது.

    இங்கு ரூ.13 கோடி செலவில் 65 வணிக கடைகள் கட்டப்பட்டுள்ளது. அதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் குத்துவிளக்கேற்றி பேசும்போது கூறியதாவது:-

    மிளகாய் வணிக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 65 வணிக கடைகள் மூலம் மாவட்டத்தில் உள்ள குண்டு மிளகாய் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பயனடைவார்கள்.ஏற்கனவே இந்த வளாகத்தில் 2 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட மிளகாய் குளிர்பதன கிட்டங்கி செயல்பட்டுவருகிறது. மிளகாய் குளிர் பதன கிட்டங்கி மற்றும் புதிதாக திறக்கப்பட்டுள்ள வணிக வளாக கடைகள் ஆகிய 2-ம் ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    மேலும் படிப்படியாக இந்த வளாகத்தில் கூடுதல் வணிக வளாக கடைகள் மற்றும் குளிர்சாதன கிட்டங்கிகள் விரிவாக்கம் செய்யப்படும்.

    வைகை அணையில் இருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வரும் உபரி நீர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கண்மாய்களில் நிரப்பப்பட்டு நிலத்தடி நீரை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) தனுஷ்கோடி, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை செயலாளர் ராஜா, வேளாண்மை விற்பனை குழு துணை இயக்குநர் மூர்த்தி, மாநில வேளாண்மை விற்பனை வாரிய உதவி செயற்பொறியாளர் நாகரத்தினம், போகலூர் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் சத்திய குணசேகரன், பரமக்குடி வட்டாட்சியர் தமீம் அன்சாரி, எட்டிவயல் ஊராட்சி தலைவர் கனகசக்தி பாஸ்கரன், மிளகாய் வத்தல் வணிகர் சங்க பிரதிநிதிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்கள், அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×