search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பூங்கா அருகில் தேங்கிய கழிவுநீரை அகற்ற கலெக்டர் உத்தரவு
    X

    தேங்கிய கழிவு நீரை பார்வையிட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் அதை அப்புறப்படுத்த உத்தரவிட்டார்.

    பூங்கா அருகில் தேங்கிய கழிவுநீரை அகற்ற கலெக்டர் உத்தரவு

    • பூங்கா அருகில் தேங்கிய கழிவுநீரை அகற்ற கலெக்டர் உத்தரவிட்டார்.
    • ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டுள்ளதையும் பார்வையிட்டார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் ஊராட்சி ஒன்றியம், பட்டணம் காத்தான் முதல்நிலை ஊராட்சியில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது கலெக்டர் பட்டணம் காத்தான் ஊராட்சி ஓம்சக்தி நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் உள்ள கட்டிடங்கள் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டார்.

    அதனை தொடர்ந்து சேதுபதி நகர் முதல் தெருவில் ரூ.23.24 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் வடிகால் வாய்க்கால் கட்டும் பணி தொடங்கி உள்ளதை பார்வையிட்டு வரும் மழைக் காலத்திற்கு முன்னதாக பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென அலுவலர்க ளுக்கு அறிவுறுத்தினார்.சேதுபதி நகர் நீரேற்று நிலையம் சீரமைக்கும் பணி மற்றும் குடிநீர் குழாய் புதிதாக நீடிப்பு செய்யும் பணி ரூ.23.19 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ள உள்ளதையொட்டி அதற்கான தேர்வு செய்யப்பட்ட இடங்களை பார்வையிட்டார். அனுமதிக்கப்பட்ட இந்த பணியை உரிய காலத்திற்குள் மேற்கொள்ள வேண்டுமென கலெக்டர் அறிவுறுத்தினார்.

    பின்னர் பட்டணம் காத்தான் ஊராட்சியில் உள்ள அம்மா பூங்கா பகுதிக்கு சென்று வெளிப்புற பகுதியில் கழிவு நீர் தேங்கியுள்ளதை பார்வையிட்ட கலெக்டர் கழிவுநீரை உடனடியாக அப்புறப்படுத்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்த பகுதியில் கழிவு நீர் வாய்க்கால் அமைக்கவும் கலெக்டர் உத்தரவிட்டார்.

    Next Story
    ×