search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாய தொழிலாளர்களுக்கும் நிவாரணம் வழங்க  கோரிக்கை
    X

    விவசாய தொழிலாளர்களுக்கும் நிவாரணம் வழங்க கோரிக்கை

    • விவசாயிகளுக்கு வழங்குவது போல் விவசாய தொழிலாளர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்.
    • அரசுக்கு விவசாய தொழிலாளர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளது.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் விவசாயத்தை முக்கிய தொழிலாக கொண்டுள்ள பகுதியாகும். குறிப்பாக அபிராமம் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட கிரா மங்களில் பல ஆயிரம் ஏக்கர் இருந்த போதிலும் குறிப்பிட்ட நஞ்சை நிலங்களில் மட்டும் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.

    விளைச்சல் இல்லாமல் பயிர்கள் கருகிப்போவது அல்லது புயல், வெள்ள காலங்களில் மழையால் பயிர்கள் அழுகியும், தண்ணீரில் மூழ்கி பயிர்கள் சேதமடைவது தொடர்கதையாகி வருகிறது.

    அபிராமத்தை சுற்றிலும் பெரிய அளவில் வேறு எந்த தொழிலும், தொழிற்சாலையும் இல்லை. இந்த பகுதியில் போதிய மழை இல்லாமல் கடும் வறட்சியால் பல ஆண்டுகளாக விவ சாயமும் பாதிக்கப்பட்டு வருகிறது. அபிராமம் பகுதி முழுவதும் விவசாயத்தை மட்டும் நம்பி 50 ஆயிரம் குடும்பங்கள் உள்ளன. இதில் விவசாயிகள் சுமார் 10 ஆயிரம் பேர் உள்ளனர்.

    விவசாய தொழிலாளர்கள் சுமார் 15 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உள்ளனர்.இவர்கள் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த உபதொழில்களில் மட்டுமே தினக்கூலிகளாக ஈடுபட்டு வருகிறார்கள். குறைந்தது மாதத்திற்க்கு 25 நாட்களாவது வேலை இருந்தால் மட்டுமே அதில் கிடைக்கும் வருமானம் மூலம் குடும்பத்திற்கான செலவினங்களை செய்ய முடியும்.

    ஆனால் விவசாய தொழிலில் ஆண்டுதோறும் தொடர்ந்து பல மாதங்களாக வேலை இல்லாமல் இருப்பதால் விவசாய தொழிலாளர்கள் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். இதனால் வறட்சி மற்றும் கூடுதல் மழையால் பயிர் பாதிப்பிற்குள்ளாகும் நிலையில் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும்போது விவசாய கூலி தொழிலாளர் குடும்பத்திற்கும் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்று விவசாய தொழிலாளர் சங்கங்கள் கோரிக்கை விடுக்கின்றன.

    இதுபற்றி விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:-

    கடந்த சில ஆண்டு களாக விவசாயம் பாதிப்புக்குள்ளாகும் நிலை தொடர்கதையாகி விட்டது. ஆண்டுதோறும் ஒரே மாதிரியான மகசூல் விவசாயத்தில் கிடைப்பதில்லை. இதனால் அனுபவம் வாய்ந்த விவசாயிகள் வேலையின்றி கிடைத்த வேலையை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    அந்த வேலையும் நிரந்தரம் இல்லாமல் வெளி மாவட்டகளில் கூலி வேலைக்கு செல்லும் நிலை உள்ளது. விவசாய தொழி லாளர்களுக்கு கூலி நிர்ணயம் செய்யப்பட வேண்டும். விவசாயிகளுக்கு மழை, வெள்ளம். வறட்சி காலங்களில் இழப்பீட்டுக்கு நிவாரணம் வழங்குவதுபோல் விவசாய கூலி தொழிலாளர்களுக்கும் இனிவரும் காலங்களில் நிவாரணம் வழங்க தமிழக அரசும், ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×