search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதிய பஸ் நிலைய பழைய கட்டிடம் இடிக்கும் பணி தீவிரம்
    X

    புதிய பஸ் நிலையத்தில் உள்ள பழைய கட்டிடங்கள் இடிக்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

    புதிய பஸ் நிலைய பழைய கட்டிடம் இடிக்கும் பணி தீவிரம்

    • புதிய பஸ் நிலைய பழைய கட்டிடம் இடிக்கும் பணி நடந்து வருகிறது.
    • ஜே.சி.பிஎந்திரம் கொண்டு இடிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் பொதுமக்களின் தேவையை கருத்தில் கொண்டு புதிய பஸ் நிலையத்தை நவீனமாக்க ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. இதையடுத்து புதிய பஸ் நிலையத்தில் இருந்த கடைகள் காலி செய்யப்பட்டது.

    தொடர்ந்து இந்த பஸ் நிலையத்திற்கு மாற்றாக ராமநாதபுரம் பஸ் நிலையம் எதிர்புறம் உள்ள சந்தைதிடல் பகுதியில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் புதிய நவீன பஸ் நிலைய வரைபடம் முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் கடந்த 2 நாட்களாக தீவிரமாக நடைபெற்று வந்தன. புதிய பஸ் நிலையம் 4.1 ஏக்கர் பரப்பளவில் 35 பஸ்கள் ஒரே நேரத்தில் நின்று செல்வதோடு, 92 கடைகள், வாகன நிறுத்துமிடம் போன்றவை அமைக்கப்பட உள்ளது.

    மேலும் தாய்மார்கள் பாலூட்டும் அறை, புறக்காவல் நிலையம், முன்பதிவு அறை, உணவகங்கள், 16 கழிப்பறைகள், பேவர் பிளாக் நடைபாதை வசதிகள் போன்றவை ஏற்படுத்தப்பட உள்ளன.

    இந்த பணிக்கான பூமிபூஜை கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடந்தது. தற்போது புதிய பஸ் நிலையத்தில் உள்ள கட்டிங்களை ஜே.சி.பிஎந்திரம் கொண்டு இடிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    Next Story
    ×