என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ரூ.18.89 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகள்
- ரூ.18.89 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
- மாணவ, மாணவிகளை புத்தகம் வாசிக்க சொல்லி அவர்களுடன் கலந்துரையாடினார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம், போகலூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, போகலூர் ஊராட்சி ஒன்றியம், எட்டிவயல் ஊராட்சி அனுசியாபுரம் கிராமத்தில் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் ரூ.11.92 லட்சம் மதிப்பீட்டில் மெட்டல் சாலை அமைக்கும் பணிகள், எட்டிவயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பாடுகளை கலெக்டர் பார்வையிட்டார். மேலும் மாணவ, மாணவிகளை புத்தகம் வாசிக்க சொல்லி அவர்களுடன் கலந்துரையாடினார்.
தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.4.76 லட்சம் மதிப்பீட்டில் கழிப்பறை கட்டும் பணி, தென்னவனூர்-வீரவனூர் இணைப்பு சாலையில் ரூ.11.56 லட்சம் மதிப்பீட்டில் மெட்டல் சாலை அமைக்கும் பணி, சத்திரக்குடி கிராமத்தில் 15வது நிதி குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணி, தீயனூர் சமத்துவ புரத்தில் ரூ.45.74 லட்சம் மதிப்பீட்டில் வீடுகளில் பழுது நீக்கம் செய்யும் பணி, போகலூர் ஊராட்சியில் 15-வது நிதிக்குழு சுகாதாரத் தலைப்பு திட்டத்தின் கீழ் ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கும் பணி ஆகியவற்றை கலெக்டர் பார்வையிட்டார்.
பின்னர், எட்டிவயல் முதல் இதம்பாடல் வரை நெடுஞ்சாலைத்துறையின் மூலம் ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.17.50 கோடி மதிப்பீட்டில் இருவழி சாலையை அகலப்படுத்தும் பணிகள் நடைபெறுவதை கலெக்டர் ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதனை தொடர்ந்து, போகலூர் ஊராட்சி ஒன்றியத்தில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப நிலையத்தில் ஆய்வு செய்து, அங்கு வந்த கர்ப்பிணிகளிடம் மருத்துவமனையில் வழங்கப்படும் மருந்து, மாத்திரைகள் தொடர்பாகவும், பரிசோதனை முறைகள் குறித்தும் கலெக்டர் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின்போது நெடுஞ்சாலைத்துறை மண்டல பொறியாளர் சந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலசுப்பிரமணியன் சிவசாமி, பரமக்குடி, வட்டாட்சியர் ரவி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்