search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓய்வூதியருக்கு வீடு தேடி வரும் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ்
    X

    ஓய்வூதியருக்கு வீடு தேடி வரும் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ்

    • ஓய்வூதியருக்கு வீடு தேடி வரும் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க ஏற்பாடு செய்துள்ளது.
    • இதற்கு சேவை கட்டணமாக ரூ.70 தபால்காரரிடம் செலுத்த வேண்டும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் தபால் அலுவலக கோட்ட கண்காணிப்பாளர் தீத்தா ரப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    மாநில அரசு ஓய்வூதியர், குடும்ப ஓய்வூதியதாரர்கள் ஜூலை 1 -ந்தேதி முதல் அவர்களது வீட்டு வாசலில் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை தபால்காரர்கள் மூலம் பெற்று சமர்ப்பிப்ப தற்கான சிறப்பு ஏற்பாடுகள் தலைமை மற்றும் துணை, கிளை அஞ்சலகங்களில் செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில் நேரில் சென்று உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க ஓய்வூதியதாரர்கள் படும் சிரமங்களை தவிர்க்கும் விதமாக ஜீவன் பிரமான் திட்டத்தில் அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி ஓய்வூதியதாரர்களின் வீட்டு வாசலிலேயே பயோ மெட்ரிக் முறையை பயன்படுத்தி டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க ஏற்பாடு செய்துள்ளது.

    இதற்கு சேவை கட்டண மாக ரூ.70 தபால்காரரிடம் செலுத்த வேண்டும். ஓய்வூதியதாரர்கள் தங்கள் பகுதி தபால்காரரிடம் ஆதார், மொபைல் எண், ஓய்வூதிய கணக்கு விவரங்களை தெரிவித்து கைவிரல் ரேகை பதிவு செய்தால் ஒருசில நிமிடங்களில் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க முடியும். தமிழக அரசு ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியதாரர்கள் இந்த வசதியைப் பயன்படுத்தி வீட்டில் இருந்தபடியே தங்கள் பகுதி தபால்காரரிடம் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பித்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×