search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் மாத்திரை உட்கொள்ளும் நேரத்தை கவரில் குறிப்பிட்டு வினியோகம்
    X

    ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் மாத்திரை உட்கொள்ளும் நேரத்தை கவரில் குறிப்பிட்டு வினியோகம்

    • மாத்திரை உட்கொள்ளும் நேரத்தை கவரில் குறிப்பிட்டு வினியோகம் செய்யப்பட்டது.
    • நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் வெங்குளம் பகுதியை சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜு என்பவர் மதுரை ஐகோர்ட்டில் பொது நல மனுத்தாக்கல் செய்திருந்தார்.

    அந்த மனுவில், அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் மருந்து மாத்திரைகள் எப்போது, எப்படிஉட்கொள்வது? என்ற விபரம் தெரிவிக்கப்படாமல் வெறுமனே வழங்கப்படுகிறது.

    இதனால் நோயாளிகள் அதனை உட்கொள்வதில் சிக்கல் இருப்பதாகவும், எனவே தனியார் மருத்துவ மனைகளில் வழங்கப்படு வதைபோல தனித்தனி கவர்களில் எந்தெந்த வேளைகளில் உட்கொள்ள வேண்டுமென தெளிவாக குறிப்பிட்டு வழங்க வேண்டுமென குறிப்பிட்டிருந்தார்.

    இதனையடுத்து அரசு மருத்துவமனைகளில் மருந்து, மாத்திரைகளை தெளிவான விபரங்களுடன் வழங்குவதில் என்ன சிரமம் உள்ளது என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மாத்திரைகளை தனி கவரில் வழங்க வேண்டுமென உத்தரவிட்டனர்.

    இதனை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்து, மாத்திரைகள் தனித்தனி கவர்களில் உட்கொள்ளும் வேளைகுறித்து எழுதி வழங்கப்படுகிறது. இதனை நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர்.

    Next Story
    ×