search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உரிய நேரத்தில் உதிரிபாகங்கள் அனுப்பாமல் அலைக்கழிப்பு
    X

    உரிய நேரத்தில் உதிரிபாகங்கள் அனுப்பாமல் அலைக்கழிப்பு

    • உதிரிபாகங்கள் அனுப்பாமல் அலைக்கழித்த நிறுவன உரிமையாளருக்கு நஷ்டஈடு வழங்க நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு விடுத்துள்ளது.
    • ஒரு வாரத்தில் மீண்டும் அனுப்புவதாக தெரிவித்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் பாரதிநகரை சேர்ந்தவர் தினகரன் (வயது34). இவர் தொழில் நிறுவனம் நடத்தி வருகிறார். நிறுவனத்திற்கு தேவையான சில உதிரி பாகங்களை 2021-ம் ஆண்டு செப்.22-ந்தேதி பெங்களூருவில் உள்ள தனியார் கம்பெனியில் ஆர்டர் செய்தார். அதற்கான தொகை ரூ.35 ஆயிரத்தையும் செலுத்தினார். ஆனால் ஆர்டர் பெற்ற நிறுவனம் அனுப்புவதாக சொன்ன தேதியில் பொருட்கள் வந்து சேரவில்லை.

    இதுகுறித்து கேட்ட போது முகவரி மாறி சென்று விட்டதாக கூறினர். ஒரு வாரத்தில் மீண்டும் அனுப்புவதாக தெரிவித்தனர். அதன் பின் நிறுவனமும், டிரான்ஸ்போர்ட் நிறுவனமும் மாறி மாறி அலைக்கழித்தனர். உரிய நேரத்தில் உதிரி பாகங்கள் கிடைக்காததால் தொழிலில் பாதிப்பு ஏற்பட்டதாக பாதிக்கப்பட்ட தினகரன் ராமநாதபுரம் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் 2022-ம் ஆண்டு ஜூலை.15-ந்தேதி வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவருக்கு பொருளுக்குரிய தொகை ரூ.35 ஆயிரத்துடன், சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சல் ஏற்படுத்தியதற்கு ரூ.25 ஆயிரம், வழக்கு செலவிற்கு ரூ.10 ஆயிரம் வழங்க நீதிபதி பாலசுப்பிரமணியன் மற்றும் ஆணையத்தின் உறுப்பினர்கள் குட்வின் சாலமன்ராஜ், நமச்சிவாயம் உத்தரவிட்டனர்.

    Next Story
    ×