search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளிவாசல்களில் ஆட்டுக்கறி கலந்த நோன்பு கஞ்சி வினியோகம்
    X

    பனைக்குளம் கிழக்கு தெரு ஜமாத் சார்பில் பொதுமக்களுக்கு நோன்புக்கஞ்சி வினியோகிக்கப்பட்டது.

    பள்ளிவாசல்களில் ஆட்டுக்கறி கலந்த நோன்பு கஞ்சி வினியோகம்

    • ராமநாதபுரம் மாவட்ட பள்ளிவாசல்களில் ஆட்டுக்கறி கலந்த நோன்பு கஞ்சி வினியோகிக்கப்பட்டது.
    • பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.

    ராமநாதபுரம்

    ரமலான் மாதம் பிறந்து விட்டாலே எங்கு பார்த்தாலும் நோன்புக்கஞ்சியின் வாசம் கமகமக்கும். அதிகாலையிலிருந்து மாலை வரை நோன்பை கடைப்பிடிக்கும் நோன்பாளிகளுக்கு உடலுக்கு சக்தி அளிக்கும் உணவாக விளங்குகிறது.

    நோன்பு கஞ்சி நோன்பாளிகளுக்காக தயாரிக்கப்பட்டாலும், அனைத்து சமுதாய மக்களும் விரும்பி வாங்கிச் செல்கின்றனர். கஞ்சியின் கூடுதல் சுவைக்காக ஆட்டு இறைச்சி சேர்த்து வருகின்றனர். இதில் சேர்க்கப்படும் பொருட்கள் சோர்வை நீக்கி, உடலின் வெப்பத்தை தணித்து, ஜீரணசக்தியை ஏற்படுத்துகிறது. திட உணவில் இது போன்ற சத்து இருப்பதில்லை. பக்க விளைவில்லாத உணவாக இருப்பதால் நோன்பு திறக்க நோன்பு கஞ்சி முக்கிய பங்கு வகிக்கிறது. ஆண்டுக்கு ஒரு மாதம் நோன்பு கஞ்சி காய்ச்சப்பட்டு மக்களுக்கு வழங்கப்படுகிறது.

    கீழக்கரை, ராமநாதபுரம், ஏர்வாடி, தொண்டி, மண்டபம், பாம்பன், பனைக்குளம், அழகன்குளம், சித்தார்கோட்டை, தேவிபட்டிணம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் நோன்புக்கஞ்சி பள்ளிவாசல்களில் மட்டு மில்லாமல் வீடுகளிலும் தயார் செய்து நோன்பு கஞ்சியை ஏழை,எளிய மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.

    ஒவ்வொரு கிராமங்களிலும் முஸ்லிம் மக்கள் இறைவன் தனக்கு அளித்த வாய்ப்பாக கருதி போட்டி போட்டு ஆர்வமாக வந்து தங்களது சொந்த செலவில் நோன்பு கஞ்சியை முஸ்லிம் ஜமாத் மூலமாக வழங்கி வருகின்றனர். நோன்பு கஞ்சிக்காக ஏராளமானோர் விண்ணப்பித்தால் முஸ்லிம் ஜமாத் நிர்வாகிகள் குலுக்கல் முறையில் நன்கொடையா ளர்களை தேர்வு செய்கின்றனர்.

    முஸ்லிம் மக்கள் மட்டுமில்லாமல் அனைத்து சமூக மக்களும் விரும்பி பருகுவதால் தநல்லிணக்கத்தின் மறு பெயராகவும், ரமலான் மாதத்தின் அடையாளமாகவும் நோன்புக்கஞ்சி திகழ்கிறது என்றால் மிகையாகாது.

    Next Story
    ×