என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தி.மு.க. இளைஞரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
- ராமநாதபுரத்தில் தி.மு.க. இளைஞரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
- மாணவரணி மாவட்ட அமைப்பாளர் சுரேஷ் நன்றி கூறினார்.
ராமநாதபுரம்
அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்ற குழு அளித்துள்ள இந்தி திணிப்பிற்கான பரிந்துரைகளையும், ஒரே பொது நுழைவுத் தேர்வு திட்டத்தையும் மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி ராமநாதபுரம் அரண்மனை அருகே மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் இன்பா ரகு ஏற்பாட்டில் தி.மு.க.இளைஞர் அணி மாணவர் அணி சார்பில் மாவட்ட திமுக செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
பரமக்குடி எம்எல்ஏ முருகேசன், ராமநாதபுரம் நகர செயலாளர், நகர் மன்ற தலைவர் கார்மேகம், நகர் மன்ற துணைத் தலைவர் பிரவீன் தங்கம் முன்னாள் அமைச்சர்கள் சத்தியமூர்த்தி, சுந்தர்ராஜன், முன்னாள் எம்எல்ஏ முருகவேல், முன்னாள் மாவட்ட செயலாளர் திவாகரன், கீழக்கரை நகர் செயலாளர் பஷீர் அகமது, தி.மு.க.இளைஞர் அணி அமைப்பாளர் வழக்கறிஞர் ஹமீது சுல்தான், துணை செயலாளர் ஜெய்னுதீன், நகர் மாணவர் அணி அமைப்பாளர் இப்திகார் ஹசன், கீழக்கரை கவுன்சிலர் சர்ப்ராஸ் நவாஸ், ராமேசுவரம் நகர் செயலாளர் நாசர்கான், ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மத்திய அரசு கண்டித்து ஏராளமானோர் கோஷமிட்டனர். மாணவரணி மாவட்ட அமைப்பாளர் சுரேஷ் நன்றி கூறினார்.