search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு மேல்நிலைப்பள்ளி இல்லாததால் மருத்துவ உள் ஒதுக்கீடு பெறுவதில் சிக்கல்
    X

    தட்சிணாமூர்த்தி, முருகன்

    அரசு மேல்நிலைப்பள்ளி இல்லாததால் மருத்துவ உள் ஒதுக்கீடு பெறுவதில் சிக்கல்

    • ராமநாதபுரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி இல்லாததால் மருத்துவ உள் ஒதுக்கீடு பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
    • தங்களுடைய மாணவர் சேர்க்கை எண்ணிக்கை குறைந்துவிடும் என்று தனியார் பள்ளிகள் கருதுகின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத் தில் 70அரசு பள்ளிகள் உட்பட 119மேல்நிலைப்பள்ளிகள் இருப்பதாக மாவட்ட கல்வி அலுவலர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்த போதிலும் ராமநாதபுரம் மாவட்டத்தின் தலைநகரான ராமநாதபுரம் நகராட்சியில் 10க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மட்டுமே உள்ளன.

    ராமநாதபுரத்தில் அரசு இருபாலர் பள்ளியோ அல்லது ஆண்கள் மேல் நிலைப்பள்ளியோ கிடையாது என்பதால் வேறு வழியின்றி தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி யிலேயே பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை சேர்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

    மாவட்டத்தின் தலைநகரான ராமநாதபுரம் நகராட் சிக்குட்பட்ட பகுதியில் இருபாலர் பயிலக்கூடிய அரசு மேல்நிலைப்பள்ளி அமைக்க வேண்டும் என்று மாணவர்கள், பெற்றோர், சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் இந்த கோரிக்கை அரசால் பரிசீலனை செய்யப்படாமல் உள்ளது.

    ஒருவேளை இருபாலார் பயிலக்கூடிய அரசு மேல்நிலைப்பள்ளி நகரில் அமையும் பட்சத்தில் தங்களுடைய மாணவர் சேர்க்கை எண்ணிக்கை குறைந்துவிடும் என்று தனியார் பள்ளிகள் கருதுகின்றனர்.

    இந்த சூழலில் மருத்துவ கனவு மேலும் ஒரு தலைவலியாக மாறியுள்ளது. மாவட்ட தலைநகரில் வசித்து வரும் ஏழை, எளிய மாணவ, மாணவிகளுக்கு தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சிரத்தை எடுத்து படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்றாலும் அரசு அறிவித்துள்ள மருத்துவ உள் இட ஒதுக்கீட்டிற்கு விண்ணப்பிக்க முடியாத நிலை உள்ளது.

    6முதல் 12-ம்வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவ-மாணவிகளுக்கு மட்டுமே 7.5சதவீத உள் இட ஒதுக்கீடு என அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இதனால் தங்களது குழந்தைகளை படிக்க வைத்தும் உள் ஒதுக்கீடு பெற முடியவில்லையே? என்று பல பெற்றோர்கள் வேதனையில் உள்ளனர்.

    இது தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர் பாலமுத்துவிடம் கேட்ட போது, ராமநாதபுரம் மாவட்ட தலைநகரில் அரசு பள்ளி இல்லை என்பதற்கு காரணம் இடம் இல்லை என்று தெரிவித்தார்.

    தற்போது அரசு அறி வித்துள்ள மருத்துவ உள் ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் சேர விண்ணப் பிக்க வேண்டு மெனில் அரசு பள்ளியில் மட்டுமே படித்திருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ள நிலையில் அரசுமேல்நிலைப்பள்ளியே இல்லாமல் இது எப்படி சாத்தியம்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இது குறித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் தட்சி ணாமூர்த்தி கூறுகையில், வாலிபர் சங்கமும், மாணவர் சங்கமும் இது சம்பந்தமாக மாவட்ட நிர்வா கத்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் அரசு பள்ளி அமைப்பதற்கு உண்டான இடவசதி இல்லை எனக்கூறி வரு கின்றனர்.ஆனால் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் ளேயே தனியார் பள்ளி இயங்குவதற்கு 99 ஆண்டுகள் குத்தகைக்கு கொடுத்துள்ளனர்.

    இது குறித்து ராமநாதபுரத்தைச் சேர்ந்த முருகன் கூறுகையில், கூலித்தொழிலாளியான எனது மகள் ராமநாதபுரம் பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் பிளஸ்-2 முடித்து தற்போது கல்லூரியில் பயின்று வருகிறார். என்னுடைய மகள் படிப்பதற்கு அரசு மேல்நிலைப்பள்ளி இல்லாத தால் 10-ம் வகுப்பு படித்து முடித்த அவரை எங்கு சேர்ப்பது? என்று தெரியாமல் கலக்கத்தில் உள்ளேன் என்றார்.

    Next Story
    ×