search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் தரிசு நிலங்களை பயன்படுத்தலாம்-கலெக்டர்
    X

    வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் தரிசு நிலங்களை பயன்படுத்தலாம்-கலெக்டர்

    • ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் தரிசு நிலங்களை பயன்படுத்தலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம், கமுதி மற்றும் போகலூர் ஊராட்சி ஒன்றியத்தில் வேளாண்மைத்துறையின் மூலம் கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் ஆய்வுசெய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    வேளாண்மைத்துறையின் மூலம் விவசாயிகளின் பயன்பாடற்ற நிலங்களை பண்படுத்தி விவசாய பணிகளை மேற்கொள்வ தற்காக கலைஞரின் வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பயன்படுத்திடும் வகையில் திட்டம் துவங்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த திட்டம் கடந்த ஆண்டு 169 ஊராட்சிகளில் சுமார் 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் கிளஸ்டர் அமைத்து திட்டம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் 261 ஊராட்சிகளில் 284 விவசாயிகள் கொண்ட கிளஸ்டர் அமைத்து பணிகள் நடைபெற்று வருகிறது. அடுத்த 5 ஆண்டுகளில் 429 ஊராட்சிகளிலும் செயல்ப டுத்திட திட்டமிடப் பட்டுள்ளது.

    வேளாண்மைத்துறை, வேளாண் பொறியியல் துறை, தோட்ட கலைத்துறை, கூட்டுறவு துறை, வருவாய் துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் ஒருங்கிணைந்து பயன்பாடற்ற விளை நிலங்களை கண்டறிந்து அந்த நிலங்களை சீரமைத்து பண்ணையை திட்டத்தின் கீழ் ஆழ்துளை கிணறு அமைத்து, சொட்டுநீர் பாசனம் அமைத்து விவசாய பணிகளை மேற்கொள் ளவும், தேவையான இடுபொருட்களை கூட்டுறவுத்துறை வழங்கிடும் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இதனால் இந்த திட்டம் விவசாயிகளிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. எனவே தங்கள் ஊராட்சி பகுதிகளில் விவசாயிகள் இந்த திட்டத்தை பயன்படுத்தி பயன் பெறலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×