search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வைகை ஆற்று முகத்துவாரத்தில் மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு
    X

    வைகை ஆற்று முகத்துவாரத்தில் மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு

    • வைகை ஆற்று முகத்துவாரத்தில் மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
    • ஆய்வின்போது ஊராட்சி தலைவர் முகமது அலி ஜின்னா உட்பட மீனவர்கள் பங்கேற்றனர்.

    மண்டபம்

    ராமநாதபுரம் மாவட்டம் பெருங்குளம் அருகே ஆற்றாங்கரை ஊராட்சியில் வைகை ஆறு கடலில் சங்கமிக்கும் பகுதியில் தென் மேற்கு பருவமழை, வட கிழக்கு பருவமழை காலத்தில் காற்றின் திசை, வேகம் மாறுபாட்டால் ஆற்றுக்கும், கடலுக்கும் உள்ள தொடர்பு துண்டிக்கப்படும். தொடர்ந்து மணல் மூடிவிடும்.

    கடலுக்கும், ஆற்றுக்கும் தொடர்பு துண்டிக்கப்படும் போது ஆற்றுப்பகுதிக்கு படகுகளை கொண்டு செல்ல முடியாமல் கடல் பகுதியில் நிறுத்த நேரிடும். அதனால் கடலில் வீசும் காற்றில் படகுகள் ஒன்றோடு ஒன்று மோதி சேதம் அடை கின்றன. அதனால் அப்பகுதி மீனவர்கள் பாதிக்கப்பட்டு வந்தனர்.

    அதைத் தொடர்ந்து வைகை ஆற்றை துார்வார அப்பகுதி மீனவர்கள் பல முறை கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து அப்பகுதியில் நேற்று மீன்வளத்துறை துணை இயக்குநர் பிரபாவதி, ஆய்வாளர் காளீஸ்வரன், பொறியாளர் மணிவண் ணன் ஆகியோர் ஆற் றங்கரை முகத்துவார பகுதியை பார்வையிட்டனர்.

    ஆற்றை தூர் வாருவதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்து மீன்வளத்துறை உயர் அதி காரிகளின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். அரசு முழுமையாக ஒப்புதல் வழங்கிய பின் துார் வாரும் பணிகள் நடக்கும் என்று அவர்கள் தெரிவித்தனர். ஆய்வின்போது ஊராட்சி தலைவர் முகமது அலி ஜின்னா உட்பட மீனவர்கள் பங்கேற்றனர்.

    Next Story
    ×