search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எரிவாயு தகன மேடை புதுப்பிக்கும் பணி
    X

    ராமநாதபுரம் நகராட்சி பகுதியில் மேற்கொள்ளப்படும் திட்ட பணிகளை நகர்மன்ற தலைவர் கார்மேகம் ஆய்வு செய்தார்.

    எரிவாயு தகன மேடை புதுப்பிக்கும் பணி

    • ராமநாதபுரத்தில் எரிவாயு தகன மேடை புதுப்பிக்கும் பணியை நகர்மன்ற தலைவர் ஆய்வு செய்தார்.
    • அப்போது பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளை அவா் அறிவுறுத்தினாா்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் நகராட்சி யில் அல்லிக்கண்மாய் பகுதியில் எரிவாயு தகன மேடை உள்ளது. கடந்த சில மாதங்களாக தகன மேடையில் எரிவாயு மூலம் சடலங்களை எரியூட்டும் எந்திரம் பழுதாகி விட்டது.

    இதனால் சடலங்கள் திறந்தவெளியில் விறகு களால் எரியூட்டப்பட்டு வருகிறது. மழை பெய்யும் காலங்களில் சடலங்களை எரியூட்டுவதில் சிக்கல் ஏற்படுவதாக புகாா் எழுந்தது.

    அதையடுத்து எரிவாயு தகன மேடையை ரூ.49 லட்சத்தில் புதுப்பிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. தகன மேடை புதுப்பிப்பு பணிகளை நகராட்சித் தலைவா் காா்மேகம் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டாா்.

    அப்போது பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளை அவா் அறிவுறுத்தினாா். இதை தொடர்ந்து ராமநாத புரம் சட்டமன்ற உறுப்பி னர் காதர்பாட்சா முத்து ராமலிங்கம் அறிவுறுத்த லின்படி ராமநாதபுரம் நகராட்சிக்குட்பட்ட ஊரணிகளை வைகை தண்ணீர் கொண்டு நிரப்பு வதற்கு பெரியகண்மாய் வரத்து கால்வாய்களை தூர்வாறும் பணியினை நகர்மன்ற தலைவர் கார்மேகம் தொடங்கி வைத்தார்.

    Next Story
    ×