என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
புகைப்பிடிக்கும் பழக்கம் அதிகரிப்பு
- ராமநாதபுரம் மாவட்டத்தில் பொது இடங்களில் புகைப்பிடிக்கும் பழக்கம் அதிகரித்துள்ளது.
- சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
ராமநாதபுரம்
பொது இடங்களில் புகைப்பிடித்தாலோ, புகையிலை சார்ந்த பொருட்களை சுவைத்து உமிழ்தாலோ தண்டனைக்குரிய குற்றமாகும். அரசு அலுவலர்களின் ஆய்வின்போது இதை கண்டறியப்பட்டாலோ, உறுதி செய்யப்பட்டலோ உடனடி அபராதமாக முதன்முறையாக ரூ.100, மீண்டும் அதே குற்றம் தொடர்ந்தால் ரூ.200 முதல் ரூ.500 வரை வசூலிக்கப்படும். மேலும் தொடர்ந்தால் 3 மாதம் வரை ஜெயில் தண்டனையுடன் ரூ.500 அபராதமும் விதிக்கப்படும்.
இப்படி ஒரு சட்டம் இருப்பது குறித்த விழப்புணர்வை சுகாதார துறையினர் பொதுமக்களிடம் ஏற்படுத்துவதில்லை. சில இடங்களில் போலீசாருடன் சேர்ந்து அபராத நடவடிக்கையை எப்போதாவதுதான் பார்க்க முடிகிறது. இந்த விஷயத்தில் அரசு சார்பில் தீவிர நடவடிக்கை இல்லாததால் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள டீக்கடை, பொது இடங்களில் பலரும் புகைக்கின்றனர்.
புகைப்பவரை காட்டிலும் அவரின் அருகில் இருக்கும் குழந்தைகள், முதியவர்கள் அதிக பாதிப்பிற்குள்ளாவதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நுரையீரல் பாதிப்பு, புற்றுநோய், டி.பி., மாரடைப்பு போன்ற பிரச்சினைகளுக்கு காரணமாக புகைபிடிக்கும் பழக்கம் உள்ளது. உலகில் ஆண்டுதோறும் 50 லட்சம் பேர் புகையிலை பயன்பாட்டினால் உயிரிழக்கின்றனர். பொது இடங்களில் புகைப்பது, உமிழ்வது போன்ற பழக்கங்களை ஒழிக்க அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் ஒரே நாளில் இல்லாவிடினும் காலப்போக்கில் பொதுமக்களிடம் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
பல ஆண்டுகளுக்கு முன்பு வரை சினிமா தியேட்டர்கள், பஸ்களில் புகைபிடிப்பது சாதாரணமாக இருந்தது. பொது இடங்களில் புகைப்பது தண்டனைக்குரிய குற்றம் என அரசு தரப்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட பின், தற்போது தியேட்டர், பஸ்களில் புகைப்பது அரிதாக மாறியது.
பொது இடங்களில் புகைப்போர் மீது சில ஆண்டுகளுக்கு முன்பு சுகாதாரத்துறையினர் நடவடிக்கையில் இறங்கினர். இதனால் பொது இடங்களில் புகைக்கும் பழக்கம் குறைந்திருந்தது. சில ஆண்டுகளாக இந்த நடவடிக்கை அறவே இல்லாததால் பொதுமக்களிடம் விழிப்புணர்வு இல்லாததால் ராமநாதபுரம் மாவட்டத்தில் பொது இடங்களில் புகைப்பிடிக்கும் பழக்கம் அதிகரித்து உள்ளது.
இந்த பழக்கத்தை அருகில் இருந்தவர்கள் திருத்த முயற்சித்தாலும் அது தகராறாக மாறுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் பொது இடங்களில் புகைப்பி டிக்கும் பழக்கத்தை ஒழிக்க போலீசார் உதவியுடன் சுகாதாரத்துறையினர் களத்தில் இறங்கி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்