search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கீழக்கரையில் அதிகரித்து வரும்  தட்டம்மை நோயால் பெற்றோர்கள் அச்சம்
    X

    கீழக்கரையில் அதிகரித்து வரும் தட்டம்மை நோயால் பெற்றோர்கள் அச்சம்

    • கீழக்கரையில் அதிகரித்து வரும் தட்டம்மை நோயால் பெற்றோர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
    • சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் 58 ஆயிரத் திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.கீழக்கரையில் 'ருபெல்லா வைரஸ்' என்றழைக்கப்படும் "தட்டம்மை நோய்" பரவி குழந்தைகளை தாக்குவதால் பெற்றோர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    கீழக்கரையில் சில நாட்க ளாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சல், தொண்டை வலி யுடன் ஆரம்பித்து 'ருபெல்லா வைரஸ்' என்ற ழைக்கப்படும் தட்டம்மை நோயாக உருவெடுத்து அதிகம் பரவி வருகிறது.

    இதுகுறித்து கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி தாளாளர் எம்.எம்.கே.முகைதீன் இபுராகிம் கூறுகையில், எமது பள்ளியில் தமிழ் மற்றும் ஆங்கிலம் மேல் நிலைப்பள்ளிகளில் 3 ஆயி ரத்து 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.

    இந்த நிலையில் தற்போது முதல் கட்ட பயிற்சி தேர்வு நடைபெற தொடங்கி விட்டன. இந்த நிலையில் பெரும்பாலான மாணவர்கள் தட்டம்மை நோயினால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலையில் மாணவர்கள் உள்ளதாகவும் மாணவர்க ளின் பெற்றோர்கள் வேதனையுடன் கூறுகின்ற னர்.

    இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் கீழக்கரை நக ராட்சி பகுதியில் தனி கவ னம் செலுத்தி பரவி வரும் தட்டம்மை நோய் குறித்து சுகாதார துறை மற்றும் நகராட்சி துறையினர் இணைந்து கீழக்கரையில் உள்ள அனைத்து பகுதிகளி லும் சிறப்பு முகாம் அமைத்து சுகாதாரத்தை குறித்து பொது மக்களி டையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.

    இதுகுறித்து கீழக்கரை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ஜவாஹிர் ஹுசைன் கூறுகையில், தற்போது கீழக்கரையில் தட்டம்மை நோய் பரவி வருகிறது. 2 மாதத்திற்குள் இதுவரை யிலும் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகளை பாதித்துள் ளது. தட்டம்மையை ஒழிப்ப தில் தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்தி 9 மாதம் முதல் 15 மாதம் வரை குழந்தைகளுக்கு அந்தந்த தெருக்களிலும் வீதிகளிலும் சிறப்பு முகாம்கள் அமைத்து ருபெல்லா வைரஸ் தடுப்பு சொட்டு மருந்து வழங்கி வந்தது.

    மேலும் 2 வயது முதல் 5 வயது வரை குழந்தைகளுக்கு ஊசி மூலம் செலுத்தும் வழி முறைகளும் உள்ளது. இந்த தடுப்பு ஊசியினை இது வரையிலும் கீழக்கரையில் 48 சதவீத குழந்தைகள் மட்டுமே பயன்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

    ருபெல்லா வைரஸ் என்பது குழந்தை உண்டாகும்போது வயிற்றில் உள்ள குழந்தையை பாதிக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்றார்.

    மேலும் சர்வதேச அள வில் ருபெல்லா வைரஸ் தட்டம்மை ஒழிப்பு 100 சதவீதம் என்று அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில் கீழக்கரையில் ருபெல்லா வைரஸ் தட்டம்மை குழந்தை களை தாக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அரசு தரப்பில் கீழக்கரை முழு வதும் கணக்கெடுப்பு நடை பெற்று வருகிறது என்றார்.

    குழந்தை மருத்துவர் ஹாசிம் கூறியதாவது:-

    இதுவரையிலும் ருபெல்லா வைரஸ் தடடம்மை தடுப்பூசி செலுத்தாதவர்கள் 5 வயது வரை உள்ள குழந்தை களுக்கும் செலுத்திக் கொள்ளலாம். இந்த தடுப்பூசி அரசு மருத்துவ மனையில் இலவசமாகவும், தனியார் மருத்துவமனையில் 600 முதல் 700 ரூபாய்க்கு செலுத்தப்படுகிறது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள லாம்.

    மேலும் ருபெல்லா வைரஸ் தாக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிமோ னியா, மூலை காய்ச்சல், கண்பார்வை தாக்குதல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். இந்த ருபெல்லா வைரஸ் தட்டம்மை 30 வருடத்திற்கு முன்பே முற்றிலும் ஒழிக்கப் பட்டுள்ளது. மீண்டும் கீழக்கரையில் உருவெடுத்து இருப்பது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. சுகா தாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    Next Story
    ×