search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சணல் மற்றும் துணிப்பை தயாரித்தல் பயிற்சி முகாம்
    X

    பயிற்சி முகாமை ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அபிதா ஹனிப் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

    சணல் மற்றும் துணிப்பை தயாரித்தல் பயிற்சி முகாம்

    • ரெகுநாதபுரம் ஊராட்சியில் சணல் மற்றும் துணிப்பை தயாரித்தல் பயிற்சி முகாம் நடந்தது.
    • இந்த முகாமில் 30 நாட்கள் பயிற்சி நடைபெறும்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் ரெகுநாதபுரம் ஊராட்சியில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் சார்பில் சணல் மற்றும் துணிப்பை தயாரித்தல் பயிற்சி முகாம் தொடங்கியது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அபிதா ஹனிப் முகாமை தொடங்கி வைத்தார்.

    ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஒன்றியம் ரெகுநாதபுரம் ஊராட்சியில் இந்திய அரசின் எண்ணை மற்றும் இயற்கை எரிவாயு கழகம் காரைக்கால் நிறுவ னம் சார்பில் கிராமப்புற பெண்களுக்கான திறன் வளர்ப்பு திட்டம் சணல் மற்றும் துணிப்பை தயாரித்தல் பயிற்சி முகாம் தொடக்க விழா நடைபெற்றது.

    மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அபிதா ஹனிப் தொடங்கி வைத்தார்.இந்த பயிற்சியில் 32 பெண்கள் கலந்து கொண்டனர். 30 நாட்கள் பயிற்சி நடைபெறும். ஓ.என்.ஜி.சி மூலம் ரூ. 49 லட்சம் மதிப்பீட்டில் 10 புதிய தையல் மிஷின்கள், அரசு பள்ளிகளுக்கு கட்டங்கள் சீரமைப்பு பணி, ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உபகரணங்கள் வழங்குதல், 2 கிராமங்களுக்கு உயர் மின் கம்பம் அமைத்து கொடுத்தல், ஒரு கிராமத்திற்கு 7 இடங்களில் குடிநீர் தொட்டி அமைத்து கொடுத்தல் உள்ளிட்ட பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில், காரைக்கால் நிறுவனத்தின் மேலாளர்கள் ரவிக்குமார், விஜயகண்ணன், தங்கமணி மற்றும் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள் புல்லாணி (திருப்புல்லாணி), சுப்புலட்சுமி ஜீவானந்தம் (மண்டபம்), திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ராஜேஸ்வரி, ஊராட்சி மன்ற தலைவர்கள் கோபாலகிருஷ்ணன் (ரெகுநாதபுரம்), முத்தமிழ் செல்வி பூர்ணவேல் (வாலாந்தரவை), மண்டபம் வட்டார மருத்துவர் சுரேந்தர் மற்றும் மகளிர் அமைப்பினர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×