search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வி.பி.சிங், நிதிஷ் குமாருக்கு கருணாஸ் புகழாரம்
    X

    வி.பி.சிங், நிதிஷ் குமாருக்கு கருணாஸ் புகழாரம்

    • வி.பி.சிங், நிதிஷ் குமாருக்கு கருணாஸ் புகழாரம் சூட்டினார்.
    • முக்கு லத்தோர் புலிப்படை அவருக்கு மரியாதையோடு வணக்கம் செலுத்துகிறது.

    பரமக்குடி

    முக்குலத்தோர் புலிப்படை தலைவர் சேது.கருணாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    பசும்பொன் முத்துராம லிங்கத்தேவர் ஜெயந்தி விழாவில் வட இந்திய தலைவர்களுக்கு தமிழ்நாட்டிலிருந்து நான் ஏன் மரியாதை செலுத்து கிறேன் என்று பலர் விமர்சனம் செய்யலாம். நன்றியோடு வாழ்வதே தமிழர் அறம்!. அந்த நன்றிக்குரியோர் இருவர். ஒருவர் மறைந்த பிரதமர் வி.பி.சிங், இன்னொருவர் பீகார் முதல்வர் நிதிஷ்குமார்.

    காங்கிரசுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் ஒரு அரசியல் இயக்கத்தை உருவாக்கி அதில் வெற்றியும் கண்டு இந்தியாவில் மாபெ ரும் அரசியல் ஆளுமையாக விளங்கியவர் முன்னாள் பிரதமர் வி.பி.சிங்.

    பிற்படுத்தப்பட்டவர்க ளுக்கு இடஒதுக்கீடு வழங்கும் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை ஏற்று, இடஒதுக்கீட்டை அமல்படுத்தியதும், காவிரி நதி நீரை எந்தெந்த மாநிலங்கள் எவ்வளவு பகிர்ந்து கொள்வது என்று தீர்ப்பளித்த காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டதும், அம்பேத்கருக்கு 'பாரத ரத்னா' பட்டம் கொடுத்ததும், நாடாளுமன்றத்தில் அவரது படத்தை இடம் பெற வைத்ததும், சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் பிரதமராக இருந்த போது தான் நடந்தது. இந்த பெருமை எல்லாம் அவரையே சேரும்.

    பொது வாழ்விலிருந்து விலகிய பின்னரும் ரிலையன்ஸ் நிறுவனம் நிலம் கையகப்படுத்தியதற்கு எதிராக விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டங் களை முன்னெடுத்து வழி நடத்தி வெற்றி கண்டவர் வி.பி. சிங். இப்படி வி.பி.சிங் தமிழ்நாட்டிற்கு, தமிழர் களுக்கு செய்த நன்மைகள் பல.

    இந்திய விடுதலை போராட்ட தியாகியாக மட்டுமின்றி சமூக விடுதலை நோக்கி வாழ்ந்த பசும்பொன் தேவர் ஜெயந்தி விழாவில் இடஒதுக்கீடு நாயகரை, சமூகநீதி காவலரை முக்குலத்தோர் புலிப்படை இயக்கம் நினைவு கூறி வணக்கம் செலுத்துகிறது. இந்திய விடுதலைக்கு பின்னர் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி முன்னோடியாக திகழும் முதல்வர் நிதிஷ்குமார். ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெ டுப்பு நடத்தி அதன் புள்ளி விவரங்களை வெளியிட்ட பெருமையைக்குரியவர் அவர். இதற்கு முன்பு 1931-ம் ஆண்டு தான் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெ டுப்பு நடந்தது.

    அதை சாத்தியப்படுத்தி இந்திய மாநிலங்களுக்கு பலர் வைக்கும் கோரிக்கை களுக்கு முன்னுதாரணமாக இருப்பவர் பீகார் முதல்வர் நிதிஷ்குமார். சாதி ரீதியான, மத ரீதியான மக்கள் தொகை கணக்கெடுப்புகளை நடத்தி அனைவருக்குமான இட ஒதுக்கீடு- சமூக நீதிக்கு வாசல் திறந்து விட்ட நீதியாளர்களாக நிதிஷ் குமார் திகழ்கிறார்கள். இவ்வேளையில், முக்கு லத்தோர் புலிப்படை அவருக்கு மரியாதையோடு வணக்கம் செலுத்துகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×