search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மறுசீரமைக்கப்பட்ட வாக்கு சாவடிகளின் பட்டியல்
    X

    ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் மறுசீரமைக்கப்பட்ட வாக்குச்சாவடி பட்டியலை அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் வெளியிட்டார்.

    மறுசீரமைக்கப்பட்ட வாக்கு சாவடிகளின் பட்டியல்

    • மறுசீரமைக்கப்பட்ட வாக்குசாவடிகளின் பட்டியலை ராமநாதபுரம் கலெக்டர் வெளியிட்டார்.
    • வருகிற 14-ந் தேதிக்குள் அந்தந்த வாக்காளர் பதிவு அலுவலர்களிடம் வழங்கலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரக் கிடங்கில் மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான மறு சீரமைக்கப்பட்ட வாக்குச் சாவடிகளின் பட்டியலை வெளியிட்டார்.

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சட்டமன்றத் தொகுதியில் 303 வாக்குச் வாக்குச்சாவடிகளும், திருவாடானை சட்டமன்றத் தொகுதியில் 346 வாக்குச் வாக்குச்சாவடிகளும், ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் 336 வாக்குச் வாக்குச்சாவடிகளும், முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 385 வாக்குச் வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 1370 வாக்குச்சாவடிகள் உள்ளன.

    நேற்று வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்குச்சாவடிகள் பட்டியல் கலெக்டர் அலுவலகம், அனைத்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், அனைத்து நகராட்சி அலுவலகங்கள் மற்றும் அனைத்து வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட உள்ளது.

    1500 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச் சாவடிகளை பிரிக்கவும், வாக்குச்சாவடிகளின் பெயர் மாற்றம், இடமாற்றம் தொடர்பான கோரிக்கைகளை வருகிற 14-ந் தேதிக்குள் அந்தந்த வாக்காளர் பதிவு அலுவலர்களிடம் வழங்கலாம்.

    மேலும் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளிடமிருந்து வரப்பெறும் கருத்துகள், கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபணைகள் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி உரிய முறையில் பரிசீலனை செய்து மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்தார்.

    இந்த நிகழ்வில் ராமநாதபுரம் கோட்டாட்சியர் சேக்மன்சூர், வட்டாட்சியர்கள் கார்த்திகேயன் (தேர்தல்), முருகேசன (ராமநாதபுரம்) உள்ளிட்ட அரசு அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×