search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆற்றாங்கரை கருப்பணசாமி-ராக்கச்சி அம்மன் கோவிலில் மாசி களரி விழா
    X

    கருப்பணசுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்ததையும், டாக்டர் ராமு களஞ்சியம் பவுண்டேசன் தலைவர், பொறியாளர் ஆர்.கே. வெங்கட்ராமனுக்கு ஆற்றாங்கரை ஊராட்சி மன்ற தலைவர் முகமது அலிஜின்னா சால்வை அணிவித்து வரவேற்றதையும் படத்தில் காணலாம்.

    ஆற்றாங்கரை கருப்பணசாமி-ராக்கச்சி அம்மன் கோவிலில் மாசி களரி விழா

    • ஆற்றாங்கரை கருப்பணசாமி-ராக்கச்சி அம்மன் கோவிலில் மாசி களரி விழா நடந்தது.
    • இதற்கான ஏற்பாடுகளை கருப்பணசாமி வழிபாட்டு குலதெய்வ மக்கள் செய்திருந்தனர்.

    பனைக்குளம்

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் யூனியனில் ஆறும், கடலும் சங்கமிக்கக்கூடிய ஆற்றாங்கரையில் விரைவில் பொற்கோவிலாக அமைய உள்ள கருப்பணசாமி-ராக்கச்சி அம்மன் கோவிலில் மாசி களரி விழா ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான விழா நடந்தது.

    இந்த கோவிலில் ஆண்டு தோறும் ராமநாதபுரம் மாவட்ட மக்களால் அன்போடு வள்ளல் என்று அழைக்கப்படும் டாக்டர் ராமு களஞ்சிய தேவர் மாசி களரி திருவிழாவை பிரமாண்டமாக நடத்தி வந்தார்.

    அப்போது 101 கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தி வருவது வழக்கம். விழாவில் ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி 5 ஆயிரம் பேருக்கு இலவச வேட்டி-சேலை மற்றும் மருத்துவ கல்வி, தொழில் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை அனைத்து சமுதாய மக்க ளுக்கும் தொடர்ந்து உதவி செய்து வந்தார்.

    தற்போது அவரது மூத்த மகனும், பொறியாளரும், ஆன்மீக செம்மலுமான ஆர்.கே.வெங்கட்ராமன் தலைமையில் மகன்கள் டாக்டர் ஆர்.கே.சிவக்குமார், திரைப்பட நடிகர் ஆர்.கே.சுரேஷ், மகள் ராகவி குமரக்கண்ணன் ஆகியோர் தந்தை வழியில் நற்காரியங்களை செய்து வருகின்றனர். மாசி களரி திருவி ழாவிவைெயாட்டி ஆற்றாங்கரையில் உள்ள கருப்பணசாமி, ராக்கச்சி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாரா தனைகள் நடந்தன.

    விழாவின் முதல் நாளான நேற்று காலை 10 மணி முதல் இன்று அதிகாலை 2 மணி வரை ராக்கச்சி அம்மனுக்கு முதல்கால பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது.

    நேற்று காலை 10 மணிக்கு மேல் சிறப்பு பூஜை, தீபாராதனை நடை பெற்றது. இன்று (19-ந்தேதி) 101 கிடாவெட்டி நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது. அதன் பின்னர் டாக்டர் களஞ்சிய தேவரின் மனைவி லட்சுமி களஞ்சியம் நாச்சியார் அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் மகன்கள் பொறியாளர்-ஆன்மீக செம்மல் ஆர்.கே.வெங்கட்ராமன், டாக்டர் ஆர்.கே.சிவக்குமார், திரைப்பட நடிகர் ஆர்.கே.சுரேஷ், மகள் ராகவி குமரக்கண்ணன் மற்றும் மருமகள்கள், பேரன்-பேத்திகள் அவரது குடும்பத்தினர் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

    மாசி களரி விழாவை முன்னிட்டு கோவில் முழுவதும் வண்ண மின் விளங்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கருப்பணசாமி வழிபாட்டு குலதெய்வ மக்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×