என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![5 மையங்களில் நீட் தேர்வு 5 மையங்களில் நீட் தேர்வு](https://media.maalaimalar.com/h-upload/2022/07/17/1730861-rmd-05.jpg)
5 மையங்களில் நீட் தேர்வு
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- 5 மையங்களில் நீட் தேர்வு நடைபெற்றது.
- ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் அமைக்கப்பட்டு உள்ளதால் மாணவர்கள், பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ராமநாதபுரம்
மத்திய அரசு மருத்துவ கல்வி மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வை நடத்தி வருகிறது. தொடக்க காலகட்டத்தில் சென்னை, திருச்சி, மதுரை போன்ற முக்கிய நகரங்களில் மட்டுமே நடத்தப்பட்டு வந்தது.
தற்போது முதன் முறையாக ராமநாதபுரம் மாவட்டத்தில் 5 நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு இன்று (17-ந் தேதி) நீட் தேர்வு நடக்கிறது.ராமநாதபுரம் அருகே செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரி மையத்தில் 864 பேரும், தேவிப்பட்டினம் ரோடு கிருஷ்ணா மெட்ரிக் பள்ளியில் 288 பேரும், தேவிப்பட்டினம் அருகே சிபான் நூர் குளோபல் பள்ளியில் 216 பேரும், மண்டபம் கேந்திரிய வித்யாலயாவில் 288 பேரும், முகம்மது சதக் பள்ளியில் 307 பேரும் தேர்வு எழுதினர். மொத்தம் 1,963 மாணவ-மாணவியர் தேர்வு எழுதினர்.
இந்த தேர்வில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் அரசு பள்ளிகளை சேர்ந்த 329 மாணவர்களும், அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 120 பேரும் தேர்வு எழுதுகின்றனர். மொத்தம் 449 பேர் சிறப்பு பயிற்சிகள் பெற்று தேர்வு எழுதினர்.
தேர்வு மைய ஏற்பாடுகளை மாவட்ட முதன்மை கல்விஅலுவலகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது. நீட் தேர்வு மையங்கள் ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் அமைக்கப்பட்டு உள்ளதால் மாணவர்கள், பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.